நிறைய பாடம் கற்றுவிட்டேன்-கங்கணா ரணவத்

By Staff

Kangana Ranaut
தனிப்பட்ட வாழ்க்கை, காதல் தோல்விகள், சர்ச்சைகள், தடுமாறி வரும் பட வாய்ப்புகள் என தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் நடிகை கங்கணா ரணவத் இதிலிருந்து பல்வேறு பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளதாக கூறுகிறார்.

கங்கணாவுக்கு பாலிவுட் ரோஜா படுக்கையாக இல்லை. மாறாக நெருஞ்சி முள்ளாகத்தான் இன்னும் உறுத்திக் கொண்டிருக்கிறது.

பட வாய்ப்புகள் சீராக இல்லை. காதல் தோல்விகள், ஏமாற்றங்கள். இதுபோதாதென்று சமீபத்தில் தீவிரவாதி என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஹெட்லியுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த பெரும் சர்ச்சையால் ஆடிப் போயுள்ளார் கங்கணா.

ஆனால் இதிலிருந்தெல்லாம் நிறையப் பாடங்கள் கற்றுக் கொண்டிருப்பதாக கூறுகிறார் கங்கணா.

22 வயதாகும் கங்கணா இதுகுறித்துக் கூறுகையில், எனக்கு வாழ்க்கைப் பாதை மென்மையானதாக இல்லை. கரடுமுரடான பாதையில்தான் நான் போய்க் கொண்டிருக்கிறேன். ஆனாலும் பல பாடங்களை கற்றுக் கொள்ள இது வாய்ப்பாக அமைந்துள்ளது.

பாலிவுட்டுக்கு வரும் ஒரு இளம் பெண் அங்கு சந்திக்கும் பிரச்சினைகள், அவள் சந்திக்கும் அவமானங்கள் ஆகியவற்றை சித்தரித்து ஸ்டார் பிளஸ் டிவியில் டிசம்பர் 7ம் தேதி பிரதிக்யா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. என்னைப் பிரதிபலிப்பதைப் போல இதை உணர்கிறேன். எனவே இந்த நிகழ்ச்சிக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.

பெருநகரங்களில் வாழும் பெண்கள் சுயேச்சையாக வாழ தகுதியை ஏற்படுத்திக் கொல்கிறார்கள். நம்பிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்கிறார்கள். ஆனால் தொலை தூரங்களைச் சேர்ந்த, கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்களிடம் இது இல்லை. அவர்களுக்கு கல்வி போதுமானதாக இல்லை. இதனால் அவர்களிடம் நம்பிக்கையும், விழிப்புணர்வும் இல்லை. இதனால் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள், முன்னேற முடியாமல் தவிக்கிறார்கள் என்கிறார் கங்கணா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X