அஞ்சலிகிட்ட பேசி ரொம்ப நாளாச்சு: ஜெய்
எங்கேயும் எப்போதும் படம் வெளியான நேரத்தில் அஞ்சலி - ஜெய் பற்றிதான் ஊடகங்களில் கிசுகிசு பரவியது. இருவரும் காதலிக்கின்றனர், திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர் என்றெல்லாம் பரபரப்பாக தகவல் அடிபட்டது. அப்போதைக்கு அதை இருவருமே மறுத்தனர்.
அதன்பின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஞ்சலி மாயமானதும் எல்லோரின் பார்வையும் ஜெய் மீதே விழுந்தது.
இப்போது மீண்டும் அஞ்சலியை காணவில்லை என்று பேசப்படுகிறது. அவர் எங்கிருக்கிறார்? எப்படியிருக்கிறார் என்று தெரியாத நிலையில் மீண்டும் அஞ்சலி பற்றி ஜெய்யிடம் கேள்வி கேட்டுள்ளனர் நிருபர்கள்.

ராஜா ராணி வெற்றி
ராஜா ராணி படத்தில் நடித்துள்ள ஜெய் படத்தின் வெற்றியை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். இரண்டு ஆண்டுக்கு முன்பு உங்களை சந்திச்சேன். அதற்கு அப்புறம் சந்திக்கிற வாய்ப்பு அமையாம போச்சு. ராஜா ராணி படம் ரீலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிட்டு இருக்கு அதுக்கு உங்க எல்லாருக்கு நன்றி.

நஸ்ரியா உடன் லவ்
நஸ்ரியாவுக்கும் உங்களுக்கும் லவ்வுன்னு சொல்றாங்களே நிஜமா? என்ற கேள்விக்கு "யாருங்க அது"... என்று பதில் சொன்னார்.

காதல் திருமணம்தான்
நான் நிச்சயமா காதல் திருமணம் தான், எனக்கு காதல் திருமணத்தில் தான் நம்பிக்கை இருக்கு.

டுவிட்டரில் இல்லை
நான் டுவிட்டரிலேயே இல்லை. டுவிட்டர்ல இங்கிலீஷ் அதிகமா தேவைபடுது என்னுடைய காதலை அனைவரையும் கூப்பிட்டுதான் சொல்வேன்.

நயன் கேஷுவல்
ராஜா ராணி படத்தில் நயன் உடன் நடிக்கும் போது அவங்க ரொம்ப கேஷுவல்லா நடிச்சாங்க எனக்கு நயன் கூட நடிச்சதுல எந்த கஷ்டமும் தெரியலை.

அஞ்சலி
அஞ்சலி எங்க இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமாமே? என்று கேள்வி எழவே, எனக்கு தெரியாதுங்க உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க அவங்க கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு...என்று கூறிவிட்டு எஸ்கேப் ஆனார் ஜெய்


Click it and Unblock the Notifications











