twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இத்தனை பாடல்கள் பாடியுள்ளேன்.. மல்லிப்பூ பாடல் பாடகி மதுஸ்ரீ ஸ்பெஷல் நேர்காணல்!

    |

    சென்னை: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் சிலம்பரசன், நடிகை சித்தி இதனானி நடிப்பில் வெளிவந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு.

    பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

    இப்படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடலை பாடிய பின்னணி பாடகி மதுஸ்ரீ நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

    இன்னும் 3 மாதங்களில் விக்ரமின் துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ்?.. கௌதம் மேனன் கொடுத்த அப்டேட்! இன்னும் 3 மாதங்களில் விக்ரமின் துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ்?.. கௌதம் மேனன் கொடுத்த அப்டேட்!

    35 பாடல்கள் பாடியுள்ளேன்

    35 பாடல்கள் பாடியுள்ளேன்

    கேள்வி: இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து....


    பதில்: ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் இதுவரைக்கும் 35 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளேன். அத்தனையும் அருமையான பாடல்கள். என்னுடைய முதல் பாடல் ஆயுத எழுத்து திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சண்டக்கோழி பாடல் தான். ஏ.ஆர். ரகுமான் என்னை அவசியம் தமிழ் கற்றுக் கொள்ள சொல்லியிருக்கிறார். அவருடன் பணிபுரிவது என்பது எப்பொழுதும் சிறப்பு தான் என்றார்.

    தனித்திறமைகள்

    தனித்திறமைகள்

    கேள்வி: தமிழ் சினிமாத்துறையில் உங்களை கவர்ந்த பின்னணி பாடகர் யார்?

    பதில்: தமிழ் சினிமாத்துறையில் ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கார்த்திக், நரேஷ் அய்யர், ஜானகி, சித்ரா ஆகியோரை எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்பொழுது உள்ள இளந்தலைமுறையினர் முறையாக இசையை கற்றுக் கொண்டு வருகிறார்கள். அவர்களிடம் நிறைய தனித்திறமைகள் இருக்கிறது என்றார். மேலும் அவர் கூறுகையில், தமிழ் ரசிகர்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவர்களிடம் நல்ல பாடல்களுக்கு வரவேற்பு கிடைக்கும். நான் பாடுவது ரசிகர்களுக்காக. அவர்களுடைய வரவேற்பு எனக்கு நிறைய உற்சாகத்தை கொடுக்கிறது.

    தாமரை கற்றுக்கொடுத்தார்

    தாமரை கற்றுக்கொடுத்தார்

    கேள்வி: வெந்து தணிந்தது காடு படத்தில் மல்லிப்பூ பாடல் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: வெந்து தணிந்தது காடு படத்தில் நான் பாடியுள்ள மல்லிப்பூ பாடல் நன்றாக வந்திருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன் தான் இந்த பாடல் பாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தப் பாடல் கணவன் மனைவி பிரிவின் போது வருகின்ற பாடல். ரொம்ப பெப்பியான பாடல். பாடல் பாடுவதற்கு முன் பாடலின் அர்த்தம், எமோஷன் பத்தி டைரக்டர் கௌதம் வாசுதேவ் மேனன் இடத்தில் கேட்டு தெரிந்து கொண்டேன். பாடலாசிரியர் தாமரை என்கூடவே இருந்து எனக்கு உச்சரிப்புகள் சொல்லிக் கொடுத்தார்கள். அவங்களோட நாக்கு மற்றும் உதடு உச்சரிப்புகளை கவனித்து பாடுவேன். கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு சிறந்த இயக்குநர். அவர் இசையின் மீது ரொம்ப ஆர்வம் உள்ளவர். இதற்கு முன்னர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் மன்னிப்பாயா பாடலை இந்தியில் பாடியிருக்கிறேன்.
    வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன், நடிகைகள் ராதிகா எல்லாரும் ரொம்ப அழகாக இருக்காங்க. சித்தி இத்னானி ரொம்ப அழகாக இருக்காங்க. அதுவும் அவங்க கன்னத்தில் குழி விழுறது கூடுதல் அழகு என்றார்.

    மருதாணி விழியில்...

    கேள்வி: உங்களுக்கு பிடித்த ராகம் எது?

    பதில்: எனக்கு மெலடி பாடல்கள் பாடுவதற்கு ரொம்ப பிடிக்கும். கிளாசிக், வெஸ்டர்ன் மியுசிக் படிச்சிருக்கேன். இந்தியில் வெளியான பாகுபலி படத்தில் வரும் மெலடி பாடல் பாடியிருக்கேன். தமிழில் மருதாணி விழியில், ஆயுத எழுத்து திரைப்படத்தில் சண்டக்கோழி, சிவாஜி படத்தில் வாஜி வாஜி போன்ற மெலடி பாடல்கள் பாடியிருக்கேன். ராகங்களில் குறிப்பா கீரவாணி, பைரவி போன்ற ராகங்கள் எனக்கு மிகவும் பிடித்த ராகங்கள்.

    சமர்ப்பணம்

    சமர்ப்பணம்

    கேள்வி: உலகத்தில் மிகச் சிறந்த பாடகி என்றால் யாரை கூறுவீர்கள்?

    பதில்: உலகத்தில் மிகச் சிறந்த பாடகி என்றால் லதா மங்கேஷ்கர் தான். அவர்களுக்கு ஈடு வேறு யாரும் கிடையாது. சமீபத்தில் நடந்த மியுசிக் கான்சர்ட்ல நான் பாடிய பாடல்களை நான் அவங்களுக்கு சமர்ப்பணமாக பாடினேன் என்று கூறியுள்ளார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=Qr-QujTE-yM இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

    English summary
    Vendhu Thaninthathu Kaadu, the Newly released Movie Starring Silambarasan and actress Siddhi Idani in the roles and music by AR Rahman. The film is produced by Wales Film International, which has been released amidst various expectations, has received great response from the fans. Here you can find a special interview of Madhusree, the playback singer who sang the song Malipoo in the film, to our filmbeat channel.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X