twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்பாவுக்கு தெரியாம தான் இந்த விஷயத்தை கத்துக்கிட்டேன்.. சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த சினம் அருண்விஜய்!

    |

    சென்னை: நடிகர் அருண்விஜய், நடிகை பாலக் லால்வானி, காளி வெங்கட் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் சினம்.

    சினம் படத்தை நடிகர் விஜயகுமார் தயாரிக்க, குமாரவேலன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அருண்விஜய், இயக்குநர் குமரவேலன், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ஆகியோர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

     10 ஆண்டுகளை நிறைவு செய்த சுந்தரபாண்டியன்..விஜய் சேதுபதிக்கு திருப்புமுனை படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சுந்தரபாண்டியன்..விஜய் சேதுபதிக்கு திருப்புமுனை படம்

    விஜயகாந்த் போல இருக்கணும்

    விஜயகாந்த் போல இருக்கணும்

    கேள்வி: நடிகர் விஜயகாந்த் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: என்னை பொறுத்தவரை ஆக்ஷன் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் நடிகர் விஜயகாந்த் மட்டுமே. தமிழ் சினிமாவில் ஆக்ஷன் காட்சிகளுக்கு பெயர் போனவர்கள் நடிகர் விஜயகாந்த் மற்றும் நடிகர் அர்ஜூன். நடிகர்கள் ரஜினி, கமல் இருவருக்கு இடையே நடிகர் விஜயகாந்த் மட்டும் தான் அவருக்கென்று தனி ஸ்டைலை உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். அது மாதிரியான இடத்தை தான் நானும் விரும்புகிறேன்.

    எனது ரோல் மாடல்

    எனது ரோல் மாடல்

    நடிகர் விஜயகாந்த் எனது ரோல் மாடல். இன்னும் சொல்லப்போனால் நடிகர் விஜயகாந்த் ரொம்ப தைரியமானவர். அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கலைநிகழ்ச்சிகளுக்காக நாங்கள் சென்றிருந்தபோது, குறிப்பிட்ட நேரத்திற்குள் எங்களுக்கு சாப்பாடு வரவில்லை. இதையறிந்தவுடன் விஜயகாந்த், வேஷ்டியை மடித்துக் கட்டி சாப்பாட்டிற்கு உடனடியாக ஏற்பாடு செய்து, அனைவரையும் சாப்பிட வைத்தார். எந்தளவுக்கு வேண்டுமென்றாலும் இறங்கி வேலை செய்யக்கூடிய மனிதர். தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருப்பது எங்களுக்கு மனவருத்தம் அளிக்கிறது. எல்லோரும் எதிர்பார்ப்பது போல் அவர் திரும்பி வரவேண்டும் என்பது எனது ஆசை. எனது அப்பா விஜயகுமார், அவருடன் தொடர்பில் தான் இருந்து வருகிறார் என்றார்.

    திருட்டுத்தனமா செய்வேன்

    திருட்டுத்தனமா செய்வேன்

    கேள்வி: பைக்கில் வெகுதூரம் நீங்கள் சென்றதுண்டா?

    பதில்: என்னை அப்பா பைக் ஓட்ட விட மாட்டார். திருட்டுத்தனமாக தான் பைக் ஓட்டுவேன். படத்துக்காக பைக் ஸ்டண்ட் கூட அப்பாவிற்கு தெரியாமல் தான் கற்றுக் கொண்டேன். அவ்வாறு கற்றுக் கொண்டதை தான் 'குற்றம் -23'ல்பைக் வீலை தூக்கிக் கொண்டு ஓட்டுவது போன்ற ஒரு காட்சியில் செய்தேன். ரொம்ப தூரம் பைக்கில் செல்ல வேண்டும் என்பது எனது ஆசை என்றார்.

    பெண்களுக்கு பாதுகாப்பு

    கேள்வி: தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள காவலன் ஆப் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: இது குறித்து இயக்குநர் குமாரவேலன் கூறும்போது, ஒரு டெக்னாலஜி சில இடங்களில் நம்மை பயமுறுத்துகிறதோ அந்த டெக்னாலஜி மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது என்றால் பாராட்டப்பட வேண்டியது தான். டெக்னாலஜியில் முன்னேற்றம் இப்படித் தான் நடக்க வேண்டும். மாற்றம் என்பது ஒரே நாளில் நடந்து விடாது. இன்னும் 10 ஆண்டுகளில் பெண்கள் தைரியமாக வெளியே நடமாட முடியும் என்ற சூழல் உருவாகும் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/rZOfguLJX88 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

    English summary
    I learnt this matter without my father knowledge, Chinam Arunvijay shared interesting information.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X