சூப்பர்ஸ்டார் ரஜினி புடிக்கும்.. ஹாலிவுட் நடிகர் பிராண்டன் பிரத்யேக பேட்டி!
சென்னை: டிராப் சிட்டி படத்தில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகர் பிராண்டன் அளித்துள்ள பிரத்யேக பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குநர் ரிக்கி பர்ச்சல் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த ஹாலிவுட் படத்தை தயாரிப்பாளர் டெல் கணேசன் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் நெப்போலியன் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

போதைக்கு அடிமையான ஒரு இளைஞர், எப்படி அதில் இருந்து மீண்டு, இசை உலகில் சாதனை படைக்கிறார் என்கிற கதையில் ஹீரோவாக நடித்துள்ள நடிகர் பிராண்டான் டி ஜாக்சன், தனது கதாபாத்திரம் குறித்தும், டிராப் சிட்டி படம் பற்றியும் விரிவாக பேசியுள்ளார்.
கடந்த மாதம் இந்த படத்தின் டீசரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டு இருந்தார்.
தமிழில் அழகாக வணக்கம் சொல்லும் ஹாலிவுட் நடிகர் பிராண்டன், டாம் க்ரூஸ், அயன்மேன் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் உள்ளிட்ட பல ஹாலிவுட் நடிகர்களுடன் நடித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் தனக்கு பிடித்த நடிகர் என்றால், அது நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி தான் என்றும், அவர் ஆசிய அளவில் மிகப்பெரிய நட்சத்திரம் என்றும் பிராண்டன் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே நடிகர் நெப்போலியன் நடித்த கிறிஸ்துமஸ் கூப்பன், டெவில்ஸ் நைட் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களை தயாரித்த டெல் கணேசன் இந்த படத்தையும் தயாரித்துள்ளார். மேலும், இந்த பேட்டியில் அவரும் கலந்து கொண்டு படம் குறித்தும் பிராண்டன் பற்றியும் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











