விஜய் கெத்து.. எனக்கு தளபதிதான் எப்போதும் பிடிக்கும்.. போட்டுடைத்த விக்ரம் மகன் துருவ்.. வைரல்!

Recommended Video

Thalapathy 65 with Director Perarasu?

சென்னை: நடிகர் விக்ரம் மகன் துருவ் தனக்கு எப்போதும் நடிகர் விஜய்தான் பிடிக்கும் என்று கல்லூரி விழா ஒன்றில் பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேபோல் நிறைய சினிமா பிரபலங்கள் இவர்கள் இருவரையும் விரும்புவது உண்டு.

யாருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள், யார் மாஸ் என்று எப்போதும் விஜய் அஜித் ரசிகர்கள் இடையே பெரிய சண்டை நடப்பது வழக்கம்.

இப்போது என்ன

இப்போது என்ன

இந்த நிலையில்தான் தற்போது முன்னணி நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் காலடி எடுத்து வைக்க தொடங்கி உள்ளனர். நடிகர் விஜயின் மகன் சில சில குறும்படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் நடிகர் விக்ரம் மகன் துருவ் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி

அர்ஜுன் ரெட்டி

முதலில் அர்ஜுன் ரெட்டி படம் வர்மா என்ற டைட்டிலில் இயக்குநர் பாலா மூலம் எடுக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த படம் கைவிடப்பட்டது. அதன்பின் மீண்டும் ஆதித்ய வர்மா என்ற பெயரில் இதே படம் எடுக்கப்பட்டது. புது இயக்குனர் கிரி சய்யா இந்த படத்தை இயக்கினார்.

வெளியாக உள்ளது

வெளியாக உள்ளது

இன்னும் சில வாரங்களில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் அட துருவ் நன்றாக நடித்து இருக்கிறாரே என்று இந்த டிரைலர் பார்த்துவிட்டு பாராட்டி உள்ளனர்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் துருவ் கலந்து கொண்டார். இதில் துருவிடம் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார். உங்களுக்கு நடிகர் விஜய் பிடிக்குமா? அல்லது நடிகர் அஜித் பிடிக்குமா என்று கேட்டுள்ளனர்.

என்ன பதில்

என்ன பதில்

இதற்கு பதில் அளித்த நடிகர் துருவ், எனக்கு எப்போதும் விஜய்தான் பிடிக்கும். விஜயின் எல்லா படங்களையும் ஆர்வத்துடன் பார்த்து இருக்கிறேன், அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதிலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X