ஐஸ்வர்யா ராயை விட த்ரிஷா தான் எனக்கு பிடிச்சி இருக்கு.. பொன்னியின் செல்வன் குறித்து பூனம் பஜ்வா!
சென்னை: சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பஜ்வா.
தற்போது குருமூர்த்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். தனசேகர் இயக்கத்தில், நட்டி ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை பூனம் பஜ்வா நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

மொழி பிரச்சனை இல்லை
கேள்வி: ஒடிடி தளங்களின் வருகை குறித்து உங்கள் எண்ணம்...
பதில்: ஓடிடி போன்ற வலைதளங்கள் மிகவும் அவசியமான ஒன்று. புதுமுயற்சிகளையும் இனி தைரியமாக எடுக்கலாம். நிறைய மொழிப் படங்கள் வெளிவருவதற்கும், புதிய நடிகர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் இதுபோன்ற தளங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற படங்களில் நடித்துள்ளேன். இதில் மொழிப் பிரச்சனைகளை நான் சந்தித்துள்ளேன். ஆனால் நான் இன்னும் ஹிந்திப் படங்களில் நடிக்கவில்லை. இனி வரும்காலங்களில் வாய்ப்பு கிடைத்தால் நான் ஹிந்தி திரைப்படங்களில் நடிப்பேன் என்றார்.

2 நாட்கள் வருத்தப்பட்டேன்
கேள்வி: உங்களுடைய தவறான வீடியோ ஒன்று வெளியானது. அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
பதில்: ஃபோட்டோ மார்ஃபிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி என் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்தி உள்ளார்கள். இதனால் 2 நாட்கள் மிகவும் சங்கடப்பட்டேன். ஆனால் பின் அதை செய்பவர்கள் தான் அதற்காக வருத்தப்படவேண்டும். அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று நான் யாருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இது குறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனத்திடம் புகார் அளித்தேன். அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அந்த புகைப்படங்களை நீக்கி உள்ளனர். இது எனக்கு மட்டுமில்ல பல நடிகர்களுக்கு இது போன்ற அனுபவங்கள் உள்ளது என்றார்.

தமிழை 90 சதவீதம் புரிந்து கொள்வேன்
கேள்வி: பொன்னியின் செல்வன் படத்தில் உங்களை கவர்ந்தது யார்?
பதில்: நான் எனது வீட்டில் இருக்கும் பொழுது சாப்டாச்சா, சௌக்கியமா என்று தமிழில் பேசுவேன். ஆனால் என்னால் தமிழை 90 சதவீதம் புரிந்து கொள்ள முடியும். தற்போது தமிழில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்தேன். விஷுவலாக அந்தப் படம் நன்றாக இருந்தது. நடிகை ஐஸ்வர்யா ராய், த்ரிஷா இருவரில் எனக்கு திரிஷாவை மிகவும் பிடித்திருந்தது. மற்றபடி சினிமா அதிகம் பார்ப்பதில்லை. எனது நண்பர்கள் மூலம் நிறைய சினிமா செய்திகளை கேட்டு தெரிந்து கொள்வேன் என்றார்.

யோகா அழகாக்கும்
கேள்வி: உடல் பராமரிப்பது குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: நடிகர், நடிகைகளைப் பொறுத்தவரையில் உடல் அமைப்பை பராமரிப்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். நானும் எப்பொழுதும் கொஞ்சம் பப்ளியாகத்தான் இருந்துள்ளேன். இதைவிட அதிக பப்ளியாக மாறாமல் இருக்க முயற்சி செய்கிறேன். தனியாக நான் எந்த உடற்பயிற்சியையோ, காஸ்மெட்டிக் பொருட்களையோ ரசிகர்களுக்கு பரிந்துரைக்க மாட்டேன். ஆனால், யோகா செய்யுங்கள் அது உங்களை மேலும் அழகாக்கும். காஸ்மெடிக் பொருட்கள் செய்யாத மேஜிக்கை யோகா செய்யும். சிறிது நேரம் பிராணயாமமும், சூர்ய நமஸ்காரமும் தினமும் செய்கிறேன். இது தான் என்னுடைய ரகசியம் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/iHGTcZUG7Pc இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.


Click it and Unblock the Notifications