Exclusive: மீடூ.. நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்ளும் செயல்: நடிகை பூர்ணா

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் போலீசாக நடித்திருக்கிறார் பூர்ணா.

சென்னை: விமலின் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார் பூர்ணா.

திருமுருகன் இயக்கத்தில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. தொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புள்ள படங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்தவகையில், தற்போது இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, புளூவேல், மதுரவீரன் என பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், தான் நடித்து வரும் படங்கள் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார் பூர்ணா.

அப்போது அவர் கூறியதாவது:-

ரொமான்டிக் த்ரில்லர் படம்:

ரொமான்டிக் த்ரில்லர் படம்:

"இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் நான் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளேன். இது ஒரு ரொமான்டிக் த்ரில்லர் படம். இந்த படத்தில் ரவுடி போலீஸாக நடித்துள்ளேன். இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. விமலையும், சிங்கம் புலியையும் துரத்தி துரத்தி அடிப்பது தான் எனது வேலை. நிறையமுறை நிஜமாகவே அடித்துவிட்டேன்.

இரட்டை வேடம்:

இரட்டை வேடம்:

அடுத்து புளூவேல் எனும் படத்தில் நடிக்கிறேன். அதிலும் போலீஸ் அதிகாரி வேடம் தான். ஆனால் அது வித்தியாசமாக இருக்கும். முதல் முறையாக இதில் இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். மம்மூட்டியுடன் மதுரவீரன் படத்திலும், தெலுங்கில் ஜெயப்பிரதாவுடன் ஒரு படத்திலும் நடிக்கிறேன். அதில் ஜெயப்பிரதாவுக்கு அம்மாவாகவும், பொண்ணாகவும் நடிக்கிறேன்.

மகிழ்ச்சி:

மகிழ்ச்சி:

என்னோடு நடிக்க வந்த சக நடிகையர் பலர் இப்போது பீல்டில் இல்லை. ஆனால் நான் இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு காரணம் தமிழ் ரசிகர்கள் தான்.

கிளாமர் செட்டாகாது:

கிளாமர் செட்டாகாது:

நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்கள் தான் என்னை தேடி வருகின்றன. அது மகிழ்ச்சியான விஷயம். எனது உடல் அமைப்புக்கு கிளாமர் செட்டாகாது. மேலும் இப்படி தான் நடிக்க வேண்டும் என்ற கட்டாயமும் எனக்கில்லை. ஏனென்றால் நான் ஒரு கிளாசிக்கல் டான்சர். நிறைய நிகழ்ச்சிகள் செய்கிறேன்.

பாய்கட் ஹேர்ஸ்டைல்:

பாய்கட் ஹேர்ஸ்டைல்:

படத்துக்காக மொட்டை அடித்தது நிறைய பேருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் என்னை பொறுத்தவரை சாமிக்கு காணிக்கை கொடுப்பதற்காக முடியை கொடுப்பது போல் தான் நானும் செய்தேன். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், நீண்டநாட்களாக எனக்கு பாய்கட் ஹேர்ஸ்டைல் வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. மொட்டை அடித்ததால் தான் அது சாத்தியமாகி இருக்கிறது.

மீடூ புகார்:

மீடூ புகார்:

மீ டூ விவகாரத்தை பொறுத்தவரை அதற்கு நான் ஆதரவாக நிற்கமாட்டேன். ஏனென்றால் ஒரு விஷயம் நடக்கும் போது, உடனடியாக அதற்கு ரியாக்ட் செய்ய வேண்டும். ஒரு மாதம் கழித்து ரியாக்ட் செய்தாலும் அது வேஸ்ட். மேலும், இந்த விவகாரத்தால் எனது நெருங்கிய ஆண் நண்பர்கள் கூட ஜாலியாக பேசவே பயப்படுகின்றனர். படப்பிடிப்பு தளத்தில் ஜாலியாக அரட்டை அடித்த காலம் மலையேறி போய்விட்டது. இது நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்ளும் செயல் என்றே சொல்லுவேன்", எனக் கூறினார் பூர்ணா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X