ஒரு மாசம் ஃபுல்லா குடிச்சேன்.. படத்திலேருந்து தூக்கிட்டாங்க.. சொல்ற பிரபல நடிகை யாருன்னு பாருங்க!

மும்பை: ஒரு மாதம் முழுக்க குடித்ததால் படித்ததில் இருந்து தன்னை நீக்கிவிட்டதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

தமிழில் தோனி, கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் பிறந்த இவர் படித்து வளர்ந்ததெல்லாம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில்தான்.

இவர், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சர்ச்சைக்குரிய கதாப்பாத்திரங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு ராதிகா ஆப்தே பேட்டியளித்துள்ளார்.

படத்தில் இருந்து நீக்கம்

படத்தில் இருந்து நீக்கம்

அப்போது தனது வாழ்க்கையில் சந்தித்த சுவாரசியமான அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். அவ்வாறு அவர் பகிர்ந்துகொண்ட ஒரு விஷயம் தான், அதிகமாக பீர் குடித்ததால் ஒரு படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

விக்கி டோனர்

விக்கி டோனர்

அதாவது, ஆயுஷ்மன் இயக்கத்தில் இந்தியில் வெளியான ‘விக்கி டோனர்' படத்துக்கு முதலில் ராதிகா ஆப்தேவைதான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனராம். ஆனால் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு ஒரு மாத விடுமுறையில் ராதிகா ஆப்தே வெளிநாடு சென்றுள்ளார்.

அதிக பீர் குடித்த ராதிகா

அதிக பீர் குடித்த ராதிகா

அப்போது அதிகமாக பீர் குடித்துள்ளார் ராதிகா ஆப்தே. மேலும் கட்டுப்பாடின்றி நிறைய உணவுகளையும் சாப்பிட்டுள்ளார். இதனால் உடல் எடை கூடி குண்டாகியுள்ளார்.

படத்தில் இருந்து நீக்கம்

படத்தில் இருந்து நீக்கம்

பின்னர் நாடு திரும்பிய ராதிகா ஆப்தேவை பார்த்த இயக்குநர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். இப்படி இருந்தால் எப்படி ஷுட்டிங்கை தொடங்குவது என்று யோசித்த அவர் உடனடியாக ராதிகா ஆப்தேவை நீக்கிவிட்டு ஹீரோயினை மாற்றிவிட்டாராம்.

கட்டுப்பாட்டுடன் ராதிகா ஆப்தே

கட்டுப்பாட்டுடன் ராதிகா ஆப்தே

எடையை குறைத்து விடுகிறேன் என ராதிகா ஆப்தே எவ்வளவோ எடுத்துக் கூறியும் இயக்குநர் அதனை கேட்கவே இல்லையாம். அன்று முதல் குடிப்பதிலும் உணவு விஷயத்திலும் கட்டுப்பாடுடன் இருக்கிறாராம் ராதிகா ஆப்தே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X