For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  யோகிபாபுவை குணச்சித்திர நடிகராக ரொம்ப பிடிக்கும்.. அப்படியே பயன்படுத்துவேன்.. பிரதீப் எக்ஸ்க்ளுசிவ்!

  |

  சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, ஹீரோவாகவும் நடித்தள்ள திரைப்படம் தான் லவ் டுடே.

  லவ் டுடே படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகிபாபு, நடிகை ரவீனா ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

  சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  ரூ 65 கோடியில் பிரம்மாண்ட வீடு வாங்கிய நடிகை..இன்டீரியர் டிசைனுக்கு மட்டும் பல லட்சம் செலவு! ரூ 65 கோடியில் பிரம்மாண்ட வீடு வாங்கிய நடிகை..இன்டீரியர் டிசைனுக்கு மட்டும் பல லட்சம் செலவு!

  வருடங்கள் முக்கியமில்லை

  வருடங்கள் முக்கியமில்லை

  கேள்வி: கோமாளி படத்திற்கு பிறகு ஏன் இத்தனை வருட இடைவெளி?

  பதில்: 3 வருடம், 5 வருடம் என்பது முக்கியமில்லை. கதை ரெடியான பிறகு தான் படம் எடுக்க வேண்டும். படம் எடுக்க வேண்டும் என்பதற்காக கதையை ரெடி பண்ணக்கூடாது. நிறைய கதைகளை தயார் செய்தேன். எதிலும் திருப்தியடையவில்லை. லவ் டுடே கதை மீது நம்பிக்கை வந்தது. அதற்கு பிறகு இந்த படத்தை எடுக்க முற்பட்டேன். என்னை நம்பி, இந்த திரைப்படத்தை இயக்கி நடிக்க வாய்ப்பை வழங்கிய ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும், அகோரத்திற்கும், அர்ச்சனா அனைவருக்கும் நன்றியை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

  ஏன் சத்யராஜ்

  ஏன் சத்யராஜ்

  கேள்வி: அப்பா லாக் குறும்படத்தில் நடிகர் டெல்லி கணேஷ் நடித்திருந்தார். அந்த குறும்படத்திலிருந்த கருவை பயன்படுத்திய நீங்கள், ஏன் நடிகர் டெல்லி கணேஷை இப்படத்தில் நடிக்க வைக்கவில்லை?

  பதில்: அப்பா லாக் குறும்படம் 2017ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அப்பொழுது நடிகர் டெல்லி கணேஷ்க்கு வயது குறைவு. இந்த படம் Future Film Version என்பதாலும், கதாபாத்திரம் அடிக்கிற மாதிரியான காட்சிகளும் அமைத்திருப்பேன். மேலும் கொஞ்சம் உடலமைப்பு தேவைப்பட்டதால் நடிகர் சத்யராஜை நடிக்க வைத்தேன் என்றார்.

  பத்திரிகையில் வந்த போட்டோ

  பத்திரிகையில் வந்த போட்டோ

  கேள்வி: நடிகர் சத்யராஜ்க்கு ஏன் நாமம் போட்டு நடிக்க வைத்தீர்கள்?

  பதில்: பொதுவாக மனிதர்கள் பட்டை, நாமம், தலைமுடி சீவுவது, தாடி ட்ரிம் பண்ணுவது போன்றவை என்பது அவரவர்களுடைய பழக்கவழக்கம். கை சட்டையை மடக்கி விடுவதில் பல வகைகள் இருக்கிறது. அவ்வாறு மடக்கி விடுவதை வைத்து மனிதர்களை மதிப்பிட முடியும். அதுபோல் ப்ராமின் மக்களிடமும் நிறைய வேறுபாடு இருக்கிறது. நாமம் போடாதவர்களும் இருக்கிறார்கள். நடிகர் சத்யராஜ் நடித்துள்ள வேணுசாஸ்திரி கதாபாத்திரமானது தொடர்ந்து கொள்கை சார்ந்த பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து வரும் நபர் என்பதை காட்டுவதற்காகவே நாமம் போடப்பட்டது. என்னை பொறுத்தவரை நான் எந்த மதத்தையும், ஜாதியையும் வெறுக்கவோ, ஆதரிக்கவோ செய்வது கிடையாது. நடிகர் சத்யராஜ் 150 படம் நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று முதலில் யோசித்தேன். பின்பு பத்திரிக்கையில் வந்த ஒரு போட்டோ வந்தது. அதை வைத்து தான் இந்த கதாபாத்திரத்தை உருவாக்கினோம். அது அவருக்கும் பிடித்து விட்டது என்றார்.

  நடிகர் யோகிபாபு காமெடி நடிகர் அல்ல

  கேள்வி: நடிகர் யோகிபாபுவின் கதாபாத்திரம் குறித்து..

  பதில்: இந்த படத்தில் அவர் நடித்த எமோஷனல் காட்சி எனக்கு பிடிக்கும். இந்த படம் டயலாக் படம் கிடையாது. கோமாளி படத்தில் அவருக்கு எப்படி காமெடி பாத்திரம் கிடையாதோ, அது போன்று இந்த படத்தில் அவருக்கு குணச்சித்திர கேரக்டர். அவர் ஒரு நடிகராக அருமையாக நடித்துள்ளார். நான் அவரை நடிகராக மட்டுமே பார்க்கிறேன், காமெடி நடிகராக பார்க்கவில்லை. கோமாளி படத்தை பொறுத்தவரை வெளியே இருந்து பார்க்கும்பொழுது Sugar Coating மாதிரி காமெடி இருக்கும். அது போல் இப்படத்திலும் என்டர்டெய்ன்மென்ட் Good Value சொல்கிற எமோஷனல் படமாக இருக்கும் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=fHreSBawzWg&t=7s இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

  English summary
  Love Today is a movie produced by AGS Entertainment and directed by Pradeep Ranganathan. In Love Today movie , Actors Radhika Sarathkumar, Sathyaraj, Yogi Babu Raveena Ravi are present. This movie which was recently released in theaters has received good response from the fans.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X