twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Exclusive: அரசியல் எனக்கு புதிதல்ல.. சிறு வயதில் இருந்தே அதோடு தான் இருக்கிறேன்: நடிகர் அருள்நிதி

    சிறு வயதில் இருந்தே தான் அரசியலில் இருந்தாலும், சினிமாவில் ஜெயிப்பது தான் தனது லட்சியம் என்று நடிகர் அருள்நிதி தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    Actor Arulnithi Exclusive: என் கூட சேர்ந்து சீனு ராமசாமியும் திரில்லர் படம் எடுக்க ஆரம்பிச்சுட்டாரு

    சென்னை: சிறு வயதில் இருந்தே தான் அரசியலில் இருப்பதாக நடிகர் அருள்நிதி தெரிவித்துள்ளார்.

    வம்சம் படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அருள்நிதி, மௌனகுரு, ஆறாதுசினம், பிருந்தாவனம் என குறிப்பிடத்தகுந்த படங்களில் நடித்துள்ளார்.

    இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை அடுத்து, அவர் நடித்துள்ள படம் கே 13. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.

    இத்திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், ஒன்இந்தியாவுக்காக அருள்நிதியை சந்தித்தேன். அவருடன் உரையாடியதில் இருந்து.

    சுந்தர் சி. விஜய்க்கு சொன்னது யோகிபாபுவுக்கும் பொருந்தும்சுந்தர் சி. விஜய்க்கு சொன்னது யோகிபாபுவுக்கும் பொருந்தும்

    கதவு எண்

    கதவு எண்

    "கே 13 ஒரு க்ரைம் திரில்லர் படம். ஒரு அப்பார்ட்மெண்ட்டில் கே 13 எனும் கதவு எண் கொண்ட வீட்டில், 48 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. இதில் நான் திரைப்பட உதவி இயக்குனராக நடித்துள்ளேன்.

    கே 13 கதை

    கே 13 கதை

    இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை அடுத்து, ஜனரஞ்சகமான கமர்சியல் படத்தில் நடிக்க வேண்டும் என்று தான் முடிவு செய்திருந்தேன். ஆனால் கே 13 கதையை கேட்டதும், வேறு படங்களில் நடிக்க தோன்றவில்லை.

    திரில்லர் படங்கள்

    திரில்லர் படங்கள்

    பொதுவாக க்ரைம் திரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். எனவே திரில்லர் படங்களில் நடிப்பது, பாதுகாப்பு வளையத்தில் இருப்பது போன்ற உணர்வை தரும். எப்படி இருந்தாலும் படம் ஓடிவிடும். அதனால் தான் தொடர்ந்து திரில்லர் படங்களில் நடிக்கிறேன்.

    முன்கோபம்

    முன்கோபம்

    நான் ஒரு முன்கோபி. எதற்கெடுத்தாலும் கோபப்படுவேன். ஆனால் இது எல்லாம் வீட்டிற்கு வெளியே தான். வீட்டில் கோபத்தை காட்ட மாட்டேன். குறிப்பாக அப்பாவிடம் கோபப்பட மாட்டேன்.

    அரசியல் குடும்பம்

    அரசியல் குடும்பம்

    நாங்கள் பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், எனது அப்பா தான் யார் என்பதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார். அவரிடம் இருந்து அந்த குணத்தை நாங்கள் கற்றுக்கொண்டுவிட்டோம். எந்த சந்தர்பத்திலும் நான் இன்னாருடைய மகன், பேரன் என எந்த சந்தர்ப்பத்திலும் வெளியில் காட்டிக்கொண்டதில்லை.

    அரசியலில் இருக்கிறேன்

    அரசியலில் இருக்கிறேன்

    சிறு வயதில் இருந்தே நான் அரசியலில் தான் இருக்கிறேன். தேர்தல் சமயங்களில் தாத்தாவின் தொகுதிக்கு சென்று அப்பா பிரச்சாரம் செய்வார். அவருடன் நானும் செல்வேன். இப்போதும் அப்படி தான் திருவாரூர் சென்று பிரச்சாரம் செய்தோம். ஆனால் இன்று நான் நடிகராகிவிட்டதால் வெளியில் தெரிகிறது.

    சினிமாவில் ஜெயிக்க வேண்டும்

    சினிமாவில் ஜெயிக்க வேண்டும்

    எனவே நான் எப்போதுமே அரசியலில் தான் இருக்கிறேன். ஆனால் இப்போது சினிமாவில் தான் எனது முழு கவனமும். இந்த துறையில் ஜெயித்து ஒரு நல்ல நடிகனாக பெயர் எடுக்க வேண்டும் என்பது தான் எனது லட்சியம்", என்கிறார் அருள்நிதி.

    English summary
    While speaking to Oneindia actor Arulnidhi said that he is into politics from his childhood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X