காலாவுக்கு முன்பில் இருந்தே நானும், தனுஷும் டச்சில் உள்ளோம்: ஹூமா குரேஷி
Recommended Video

சென்னை: காலாவுக்கு முன்பில் இருந்தே நானும், தனுஷும் டச்சில் உள்ளோம் என்று நடிகை ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார்.
ரஜினியின் காலா படம் மூலம் கோலிவுட் வந்துள்ளவர் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி. காலாவின் முன்னாள் காதலி ஜரீனாவாக அம்சமாக நடித்திருந்தார் ஹூமா.
தமிழில் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடித்துவிட்டார். இந்நிலையில் அவர் காலா பற்றி கூறியதாவது,

ரஞ்சித்
நான் நடித்த கேங்ஸ் ஆஃப் வாசிபூர் படத்தை பா. ரஞ்சித் பார்த்துள்ளார். அவருக்கு என் நடிப்பு பிடித்திருந்தது. அவர் என் நடிப்பை பற்றி பிறரிடம் பேசியிருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு தனுஷிடம் இருந்து தான் கால் வந்தது.

தனுஷ்
நானும், தனுஷும் எப்பொழுதுமே டச்சில் உள்ளோம். இருவரும் சேர்ந்து படம் பண்ண விரும்பினோம். அவர் ஒரு சிறப்பான நடிகர். சேர்ந்து நடிக்க வேண்டும் என்று முன்பு பேசினோம், ஆனால் அது பல காரணங்களால் நடக்கவில்லை.

தயாரிப்பு
தனுஷ் கால் பண்ணியதும் படம் குறித்து என்று நினைத்தேன். ஆனால் தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்றார். ஹீரோ ரஜினி என்றதுமே நான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்.

பிடித்திருந்தது
நான் பா. ரஞ்சித்தை சந்தித்தேன். அவர் கதை சொன்னார். உடனே எனக்கு பிடித்துவிட்டது. இந்த படத்தில் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று உடனே முடிவு செய்துவிட்டேன்.

பயம்
காலா படத்தில் கடினமான காட்சி என்றால் நான் ரஜினியை திட்டுவது தான். அந்த காட்சியில் நடிக்க ரொம்பவே பயந்தேன். ஆனால் அந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்கிறார் ஹூமா.


Click it and Unblock the Notifications











