நிர்வாணமாக இருப்பது எனக்கு சவுகரியம்: அமலா பால்

By Siva

Recommended Video

Aadai Press Meet - நிர்வாணமா எப்படி நடிச்சேன் தெரியுமா?

சென்னை: ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தது குறித்து மீண்டும் பேட்டி அளித்துள்ளார் அமலா பால்.

ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் துணிச்சலான பெண்ணாக நடித்துள்ள ஆடை படம் வரும் 19ம் தேதி வெளியாக உள்ளது. அந்த படத்தில் அமலா பால் எதற்காக ஆடையில்லாமல் நடித்தார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் படம் குறித்து அமலா பால் தெரிவித்துள்ளதாவது,

ஆடை

ஆடை

எனக்கு நிர்வாணமாக இருப்பது சவுகரியமானது. எனக்கு என் உடம்பை நினைத்து பெருமையாக உள்ளது. இந்த படத்திற்காக நான் என் உடம்பை மெருகேற்றியுள்ளேன். சிக்ஸ் பேக் வைக்குமாறு இயக்குநர் கூறினார். சிக்ஸ் பேக்கிற்கு முயற்சி செய்தால் தான் ஒரு பேக்காவது வரும் என்று நினைத்தோம்.

விஜய்

விஜய்

ஒளிப்பதிவாளராக விஜய்யை ஒப்பந்தம் செய்யலாம் என்றார் இயக்குநர் ரத்னா. நான் விஜய் வேண்டாம் வேறு ஒருவரை போடலாம் என்றேன். அதன் பிறகு ரத்னகுமார் கூறியதால் விஜய்க்கு போஸ் கொடுத்தேன். நான் வழக்கமாக கொடுப்பது போன்று போஸ் கொடுத்தேன். விஜய்யோ இப்படி வேண்டாம் அமலா கண்ணை சிமிட்டாமல் இருக்காதீர்கள் என்றார். அது எனக்கு பிடிக்கவில்லை. பின்னர் புகைப்படங்களை பார்த்தபோது அசந்துவிட்டேன். ரத்னா நீங்கள் சொன்னது தான் சரி விஜய்யை ஒப்பந்தம் செய்யலாம் என்றேன்.

பெற்றோர்

பெற்றோர்

நிர்வாண காட்சியில் நடிக்க பெற்றோரிடம் அனுமதி பெற்றேன். அம்மா அதிர்ச்சி அடைந்த போதிலும் நல்ல கதையா என்று மட்டும் தான் கேட்டார். நல்ல கதை அம்மா என்றதும் ஓகே சொல்லிவிட்டார். அப்பா எப்பொழுதுமே என்னை ஊக்குவிப்பவர். அவர் ஆடை படத்தில் நடிக்க எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

அழுகை

அழுகை

நிர்வாண காட்சியில் நடித்த நாள் அன்று தான் பதட்டமாக இருந்தது. நடித்து முடித்த பிறகு அழுதேன். அந்த காட்சியை பார்த்து யார் என்ன சொல்வார்கள் என்பதால் ஏற்பட்ட பதட்டத்தில் அழுகை வந்ததை புரிந்து கொண்டேன். நாளை யார் என்ன சொல்வார்கள் என்று ஏன் பயப்பட வேண்டும் என்று எனக்கு நானே நம்பிக்கை தெரிவித்துக் கொண்டேன். அதன் பிறகு மகிழ்ச்சியாகிவிட்டது என்றார் அமலா பால். பிற நடிகைகள் பேசத் தயங்கும் நிர்வாணம் பற்றி அமலா தைரியமாக பேசுவதை பார்த்து அவரின் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X