நான் எந்த தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டிலும் இல்லை, அட்ஜஸ்ட் செய்வதும் இல்லை: 'ஸ்கெட்ச்' நடிகை

By Siva

சென்னை: தான் ஒரு தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகை ஸ்ரீப்ரியங்கா விளக்கம் அளித்துள்ளார்.

நிலா மீது காதல் படம் மூலம் நடிகையானவர் ஸ்ரீ ப்ரியங்கா. கங்காரு, வந்தா மல, விக்ரமின் ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மிக மிக அவசரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ப்ரியங்கா பற்றி ஒரு தகவல் பரவியது.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

ஸ்ரீ ப்ரியங்கா தயாரிப்பாளர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவர் சொல்படி மட்டுமே நடப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது. மேலும் ஸ்ரீ ப்ரியங்கா அந்த தயாரிப்பாளரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ஸ்ரீ ப்ரியங்கா விளக்கம் அளித்துள்ளார்.

செய்தி

செய்தி

அண்மையில் ஒரு பத்திரிகையில் என்னை பற்றி தவறான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. என் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் சிலர் இவ்வாறு என்னை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருவதை அந்த பத்திரிகை செய்தி மூலம் தெரிந்து கொண்டேன். இந்த நேரத்தில் உண்மையை சொல்ல விரும்புகிறேன் என்று ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.

இல்லை

இல்லை

நான் தயாரிப்பாளர் அல்லது மேனேஜரின் கட்டுப்பாட்டில் இல்லை. நான் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறேன். நல்ல வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். நான் நடித்துள்ள ஜெஸ்ஸி படம் விரைவில் வெளியாக உள்ளது. இதுவரை நான் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன் என்று ஸ்ரீ ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.

அட்ஜஸ்ட்

அட்ஜஸ்ட்

என் நடிப்பு மற்றும் நடத்தை மீது யாருமே குறை கூறியது இல்லை. என்னை தேடி வரும் பட வாய்ப்புகளை எல்லாம் ஏற்பது இல்லை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறேன். படத்தின் பட்ஜெட், ஹீரோ என்று எதற்காகவும் நான் அட்ஜஸ்ட் செய்தது இல்லை என்று ஸ்ரீ ப்ரியங்கா விளக்கம் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X