'மஹிமா ரொம்ப நல்ல பொண்ணு'... யார் சொன்னா? அவங்களே சொல்றாங்கப்பா! Exclusive

தான் மிகவும் சமத்தான பெண் என்று நடிகை மஹிமா தெரிவித்துள்ளார்.

Recommended Video

நான் நல்ல பொண்ணுங்க : சாட்டை மஹிமா- வீடியோ

சென்னை: தான் மிகவும் சமத்தான பெண் என்று நடிகை மஹிமா நம்பியார் ஒன்இந்தியாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த சாட்டை படம் மூலம் அறிமுகமானவர் மஹிமா நம்பியார். குற்றம் 23, இரவுக்கு அயிரம் கண்கள் என தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர், கோலிவுட்டின் பிஸி நாயாகிகளில் ஒருவர்.

அட்டக்கத்தி தினேஷுடன் அவர் நடித்திருக்கும் அண்ணனுக்கு ஜே திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படத்தின் புரொமோஷன் வேலைகளுக்காக சென்னை வந்திருந்தவரை சந்தித்தோம். அப்போது அவர் பேசியதிலிருந்து.

என்ன கேரக்டர்....

என்ன கேரக்டர்....

அண்ணனுக்கு ஜே ஒரு அரசியல் நையாண்டி திரைப்படம். யாரையும் குறிப்பிட்டு சொல்லாமல், சமகால அரசியல் அமைப்பை நக்கல் அடிக்கும் படம். இந்த படத்தில் நான் ஒரு திமிர்பிடித்த, பிடிவாதக்காரியாக நடித்திருக்கிறேன். பக்கத்து வீட்டு பெண் மாதிரி எனது கதாபாத்திரம் இருக்கும்.

அட்டக்கத்தி தினேஷுடன்...

அட்டக்கத்தி தினேஷுடன்...

தினேஷ் ஒரு சின்சியரான நடிகர். ஒவ்வொரு டேக்கிலும் ஏதாவது இம்ப்ருமென்ட் காட்டிக்கொண்டே இருப்பார். அவரிடம் இருந்து அதை கற்றுக்கொண்டேன். அண்ணனுக்கு ஜே படத்தில் வேலை பார்த்தது ஒரு நல்ல அனுபவம்.

'அசுரகுரு'

'அசுரகுரு'

அசுரகுரு ஒரு நகரத்தில் நடக்கும் கதை. இந்த படத்திலும் எனக்கு நல்ல கேரக்டர் கிடைத்திருக்கிறது. படம் சூப்பரா வந்திருக்கு.

கிசுகிசுவே இல்லை

கிசுகிசுவே இல்லை

நல்ல விஷயம் தானே. நான் ரொம்ப நல்ல பொண்ணு. படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு போய்டா நான் உண்டு, என் வேலை உண்டுன்னு இருப்பேன். அது போல நான் லவ் எல்லாம் எதுவும் செய்யலை. லவ் பண்றது தப்பு கிடையாது. ஆனா இப்போதைக்கு எனக்கு ஆள் இல்லை. அதனால தான் என்னை பற்றி கிசுகிசு ஏதும் வரவில்லையோ என்னவோ.

படிப்பிலும் கவனம்

படிப்பிலும் கவனம்

நான் இப்ப எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். அடுத்து எம்.பில்., பி.எச்டி, நெட் தேர்வுன்னு பிளான் பண்ணிருக்கேன். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், படிப்பு தான் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியம். அதனால தான் அதைவிடக்கூடாதுன்னு தீர்மானமா இருக்கேன். இப்ப தான் இரண்டாம் ஆண்டு தேர்வு முடிந்தது. ஓரளவுக்கு நல்லாவே பண்ணியிருக்கேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X