Exclusive : கவர்ச்சியாக நடிக்க மறுத்ததால் 2 வருடம் புதிய படவாய்ப்புகள் கிடைக்கவில்லை: சோனா
பிரபல கவர்ச்சி நடிகை சோனா, அவதார வேட்டை படம் மூலம் வில்லியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
Recommended Video

சென்னை: கவர்ச்சி வேடங்களில் இனி நடிப்பதில்லை என்பதில் தான் உறுதியாக இருப்பதாக நடிகை சோனா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் சோனா. கோச்சடையான், பத்துக்கு பத்து உள்ளிட்ட பல படங்களில் படு கவர்ச்சியாக நடித்திருப்பார். சில படங்களில் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து காமெடி செய்திருப்பார்.
சமீபகாலமாக அவர் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதில்லை. இதனால் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சுமார் இரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் அவதார வேட்டை எனும் படத்தின் மூலம் வில்லி அவதாரம் எடுத்திருக்கிறார்.
ஒன் இந்தியாவிற்காக அவரை சந்தித்தேன். நம்மிடம் அவர் கூறியதாவது,

கவர்ச்சி வேடங்கள்:
"கவர்ச்சி வேடங்களில் நடித்து சலிப்படைந்துவிட்டேன். ரசிகர்களும் சலிப்படைந்திருப்பார்கள் என நம்புகிறேன். இன்னும் எத்தனை நாளைக்கு தான் கவர்ச்சியாகவே நடிக்க முடியும். அதனால் தான் குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறேன் துவங்கி இருக்கிறேன்.

பட வாய்ப்புகள் இல்லை:
நான் கவர்ச்சியாக நடிப்பதில்லை என முடிவு செய்தபிறகு, என்னை நடிக்க யாரும் அழைக்கவில்லை. அதனால் சுமார் இரண்டு வருடங்கள் இடைவெளி ஏற்பட்டது. ஆனால் நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

மலையாளப் படங்கள்:
தற்போது நிறைய மலையாளப்படங்களில் நடித்து வருகிறேன். மலையாளப் படம் என்றதும் வேறு விதமாக நினைக்க வேண்டாம். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறேன். அது எனக்கு பிடித்திருக்கிறது.

சண்டைக்காட்சி:
தற்போது தான் தமிழிலும் அது மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க அழைக்கிறார்கள். அவதார வேட்டை படத்தில் வில்லியாக நடித்துள்ளேன். படத்தில் எனக்கு சண்டைக் காட்சி இருக்கிறது. இதற்காக நிறைய ரிஸ்க் எடுத்து நடித்தேன். தொடர்ந்து வில்லியாகவே நடிக்க ஆசைப்படுகிறேன்" என இவ்வாறு நடிகை சோனா கூறினார்.


Click it and Unblock the Notifications











