twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன் படத்தை மிஸ் பண்ணிட்டேன்.. புதுப்பேட்டை தான் என்னுடைய அங்கீகாரம்!

    |

    சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க முடியாமல் போனது நான் செய்த துரதிஷ்டம் என்று நடிகரும், இயக்குநருமாகிய அழகம்பெருமாள் தெரிவித்துள்ளார்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஏ.வி.எம். தயாரிக்கும் தமிழ் ராக்கர்ஸ் திரைப்படம் சோனி லைவ் ஒடிடி தளத்தில் ஆகஸ்ட் 19ம் தேதி வெளிவருகிறது. நடிகர் அருண்விஜய் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர்அழகம் பெருமாள் நடித்துள்ளார். இவர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

    கனவு நனவான தருணம்.. பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டில் தெலுங்கில் சரளமாக பேசிய விக்ரம்! கனவு நனவான தருணம்.. பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டில் தெலுங்கில் சரளமாக பேசிய விக்ரம்!

    ஒடிடி தளம்

    ஒடிடி தளம்

    கேள்வி: ஒடிடி தளம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: ஒடிடி தளமானது வித்தியாசமான கதைகளத்துடன் வரும் இயக்குநர்களுக்கு நல்லதொரு பிளாட்பார்மாகும்

    எப்போது அங்கீகாரம்

    எப்போது அங்கீகாரம்

    கேள்வி: நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது?

    பதில்: இயக்குநராக இல்லாமல், இதுவரை நான் கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்துள்ளேன். ஒரு நடிகனுக்கு எப்போது அங்கீகாரம் கிடைக்கிறது என்றால், அவனுக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்தால் மட்டுமே. எனக்கு நடிகன் என்ற அங்கீகாரம் 2005ம் ஆண்டு வெளியான புதுப்பேட்டை படத்தின் மூலம் எனக்கு கிடைத்து விட்டது. அன்றைய காலக்கட்டத்தில் வேண்டுமென்றால், அப்படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் தலைமுறை கடந்து, இன்றைய தலைமுறையினர் அப்படத்தை தேடி பார்த்து பாராட்டுகின்றனர். 17வருடத்திற்கு பிறகும் கூட புதுப்பேட்டை படமானது பேசும்பொருளானது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்றார்.
    சமீபத்தில் கூட இயக்குநர் செல்வராகனிடம் பேசும்போது, அவர் கண்டிப்பாக புதுப்பேட்டை 2 படம் விரைவில் தொடங்குவோம் என்றார்.

    தயாரிப்பாளர்கள் தான் ஹீரோ

    தயாரிப்பாளர்கள் தான் ஹீரோ

    கேள்வி: தமிழ் ராக்கர்ஸ் திரைப்படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன?

    பதில்: தமிழ் ராக்கர்ஸ். வில்லன்னா என்றால் ஹீரோயாராக இருக்க முடியும். தயாரிப்பாளர்கள் தான் ஹீரோ. இந்த படத்தில் நான் தயாரிப்பாளராக நடித்திருக்கிறேன். குறிப்பிட்ட தயாரிப்பாளர் போல் நான் நடிக்கவில்லை. என்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களின் சாயலை தான் இந்த படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறேன். படத்தில் என்னுடைய உடல் அசைவு, மொழி, முகச்சாயல் போன்றவை கொண்டு முக்கியமான தயாரிப்பாளரை உங்களுக்கு கண்டிப்பாக இந்த படம் நினைவுப்படுத்தும் என்றார்.

    பல வருட கனவு

    கேள்வி: பொன்னியின் செல்வன் படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: எனது குருநாதர் மணிரத்னத்தின் ஒரு நாள் கனவு படம் அல்ல பொன்னியின் செல்வன். இப்படமானது பல வருட கனவு. நான் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்ததால், அவர் அழைத்தும் கூட என்னால் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க முடியாமல் போனது நான் செய்த துரதிஷ்டம் என்றார். பொன்னியின் செல்வன் வெற்றி பெற நான் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/-E0DNHjfuyk இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். நடி

    English summary
    I missed Ponniyin Selvan film and Puduppet is my recognition, Alagam Perumal Exclusive Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X