»   »  எனக்கு சரின்னு தோணுச்சின்னா எந்தக் கருத்தையும் நான் சொல்லத் தயங்கமாட்டேன்! - சிம்பு

எனக்கு சரின்னு தோணுச்சின்னா எந்தக் கருத்தையும் நான் சொல்லத் தயங்கமாட்டேன்! - சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிம்பு தம்பி... இத இத இதத்தான் உங்ககிட்ட எதிர்ப்பார்க்கிறோம்!- வீடியோ

சென்னை: எனக்குச் சரி என்று தோன்றினால் எந்தவிதமான துணிச்சலான கருத்தையும் சொல்லத் தயங்க மாட்டேன் என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

தட்றோம் தூக்கறோம் படத்துக்காக டீமானிடைசேஷன் ஆந்தம் என்ற பெயரில் ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். சிம்பு பாடியுள்ளார். பணமதிப்பிழப்பால் மக்கள் பட்ட அவதிகளை இந்தப் பாடலில் துணிச்சலாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் தமிழக பாஜகவினர். இந்தப் பாடலை எதிர்த்தும், பாடிய சிம்புவைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஒரு தகவல் வெளியானதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிம்பு வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் தரப்பட்டுள்ளது.

நான் எழுதல

நான் எழுதல

இந்த நிலையில் இந்தப் பாடல் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை குறித்து சிம்பு கூறுகையில், "இந்தப் பாடலை நான் எழுதவில்லை. இசையமைக்கவில்லை. என் படத்துக்காவும் இது உருவாக்கப்படவில்லை.

நல்ல பாடல்

நல்ல பாடல்

இப்படி ஒரு பாடலை எழுதிவிட்டு, என்னிடம் வந்தார்கள். படித்துப் பார்த்தேன். நன்றாக இருந்தது. மக்கள் பட்ட அவஸ்தைகளைச் சொல்லியிருந்ததால், ஒப்புக் கொண்டு அதைப் பாடினேன். அதில் எந்தத் தவறும் இல்லை.

தீமையும் இருக்கு

தீமையும் இருக்கு

டீமானிடைசேஷனில் மக்கள் பாதித்ததைத்தான் அதில் சொல்லியிருந்தார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் அதில் தீமையும் இருக்கும்தானே. அதைத்தான் அந்தப் பாடலில் சொல்லியிருந்தார்கள். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கோ அந்தப் பாடலுக்கோ இல்லை.

தயங்கமாட்டேன்

தயங்கமாட்டேன்

எனக்குச் சரி என்று தோன்றினால் எந்தவிதமான துணிச்சலான கருத்தையும் சொல்லத் தயங்க மாட்டேன். என் இயல்பு அதுதான்," என்றார்.

Read more about: simbu சிம்பு
English summary
Actor Simbu says that he would never hesitates to express bold comments in important issues.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X