twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சீரியஸ் படம்னா தமிழ், மலையாளம்... ஜாலி கேலின்னா இந்தி... இதுதான் என் பார்முலா... பிரியதர்ஷன்

    By
    |

    சென்னை: தமிழில், சின்னமணிக்குயிலே, கோபுர வாசலிலே, லேசா லேசா, காஞ்சிவரம், நிமிர், சம்டைம்ஸ் உட்பட பல படங்களை இயக்கியவர், பிரியதர்ஷன். இந்தியிலும் பல படங்களை இயக்கி இருக்கிறார்.

    80 மற்றும் 90 களில் மோகன்லால் நடிப்பில் இவர் இயக்கிய பல படங்கள் மலையாளத்தில் சூப்பர் ஹிட். இவர்கள் காம்போவுக்கு இப்போதும் இருக்கிறது எதிர்பார்ப்பு.

    இவர் மகள் கல்யாணி ஹீரோயினாக நடித்துவருகிறார். தமிழில் 'ஹீரோ' படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தி படம் இயக்குகிறார் பிரியதர்ஷன். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி.

     ஹங்கம்மா 2

    ஹங்கம்மா 2

    ''ஏழு வருஷமா இந்தி படம் பண்ணலை. மலையாளத்துல மோகன்லாலோட, கீதாஞ்சலி, ஒப்பம், ஜெயசூர்யாவோட அம்மயும் முயலும் படங்கள் பண்ணினேன். தமிழ்ல உதயநிதி நடிச்ச நிமிர் அப்புறம் சம்டைம்ஸ் படங்களை டைரக்ட் பண்ணினேன். இப்ப திரும்பவும் இந்திக்கு போறேன். ஹங்கம்மா 2 பண்றேன். காமெடி படம்'' என்கிறார் பிரியதர்ஷன்.

     சமூக சேவை

    சமூக சேவை

    ஏன் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீங்க?

    மக்களை சிரிக்க வைக்கிறது பெரிய விஷயம். என் படங்கள் மூலமா அதை பண்றதால, நான் சமூக சேவை செய்யறதாவும் நினைக்கிறேன். என்னை காமெடி பட இயக்குனர்னு சொல்றதைப் பற்றி கவலையில்லை. நான் சிறந்த டைரக்டர் இல்லைன்னு கூட சொல்லலாம். ஆனா மக்களை சிரிக்க வைக்கிறதுதான் கடினமான கலைனு நினைக்கிறேன்.

     காமெடி படங்கள்

    காமெடி படங்கள்

    தமிழ்ல 'காஞ்சிவரம்' மாதிரி சிரியஸ் படம் பண்ணியிருக்கீங்களே?

    ஆமா. இந்தியில அந்த மாதிரி பண்ணினா, ஏத்துக்கமாட்டாங்க. அவங்களுக்கு அர்த்தமே இல்லைன்னாலும் காமெடி படங்களை ரசிப்பாங்க. அங்க பரீட்சார்த்த முறையிலான படங்கள் பண்ண நினைச்சாலும் அதிகப்பட்சமா, பதாய் ஹோ, அந்தாதுன் மாதிரிதான் பண்ண முடியும். காஞ்சிவரம் போலான படங்களை பண்ண முடியாது. அங்க பொழுதுபோக்கு படங்கள் பண்ணலைன்னா, சர்வைவ் பண்ணவும் முடியாது.

     இதுதான் என் ரூட்

    இதுதான் என் ரூட்

    அதனாலதான் காமெடி படங்களை இயக்குறீங்களா?

    உண்மை அதுதான். தமிழ், மலையாளத்துல சீரியஸ் படங்கள் பண்ணணும். இந்தியில காமெடி படங்கள் பண்ணணும். இதுதான் என் ரூட். இதன் மூலமான என் எனர்ஜியா சரியா கொண்டு போறேன்னு நினைக்கிறேன்.

     சொந்த பிரச்னை

    சொந்த பிரச்னை

    ஏன் சில வருடங்களா இந்தி படம் பண்ணலை?.


    ஏன்னா, எனக்கு சில சொந்த பிரச்னைகள் இருந்தது. கடந்த சில வருஷங்கள், எனக்கு சரியா அமையல. அப்புறம்தான் மோகன்லால் நடிப்பில் கீதாஞ்சலி பண்ணினேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. அடுத்து படங்கள் பண்ண ஆரம்பிச்சேன். இப்ப இந்திக்கு வந்துட்டேன்.

     பூச்சாக்கொரு மூக்குத்தி

    பூச்சாக்கொரு மூக்குத்தி

    ஹங்கம்மா காமெடி படம். இதுவும் அப்படித்தானா?


    இது 2003-ல நான் இயக்கிய படம். மலையாளத்துல டைரக்ட் பண்ணின பூச்சாக்கொரு மூக்குத்தி படத்தை இந்திக்கு தகுந்தாப்ல மாற்றி ரீமேக் பண்ணியிருந்தேன். அக்‌ஷய் கண்ணா, பரேஸ் ராவல், ரிமி சென் உட்பட நிறைய பேர் நடிச்சிருந்தாங்க. நல்ல வரவேற்பு கிடைச்சது. இப்போ அதோட இரண்டாவது பாகம். இதுவும் காமெடிதான். பரேஸ் ராவல், ராஜ்பால் யாதவ் இருக்கிறாங்க. புதுசா, ஷில்பா ஷெட்டி, மீஸான் ஜாபரி, பிரணிதா சுபாஷ், அஷூதோஷ் ராணா உட்பட சிலர் நடிக்கிறாங்க. காமெடிக்கு கண்டிப்பா கேரண்டி.

    English summary
    Veteran filmmaker Priyadarshan, who returns to Hindi cinema after seven years with Hungama 2, says he kept away from Bollywood as he felt there was not much scope for experimentation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X