For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அனிருத்தை பாடவைக்க வேண்டும் என்று நினைத்தேன்.. முடியாமல் போனது.. இசையமைப்பாளர் எஸ்.ஆர்.ஹரி வருத்தம்!

  |

  சென்னை: அறம் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரிப்பில் ராகவ் மிர்தத் இயக்கத்தில் அஞ்சலி நாயர், அறிமுக நடிகர் கௌசிக் ராம், ஹிரோஷினி நடிப்பில் வெளிவந்துள்ள படம் காலங்களில் அவள் வசந்தம்.

  இப்படத்திற்கு எஸ்.ஆர். ஹரி இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் தியேட்டரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் எஸ்.ஆர். ஹரி நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

  புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது: ரஜினி, Jr NTR கைகளால் விருது பெற்றார் அப்புவின்மனைவி! புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது: ரஜினி, Jr NTR கைகளால் விருது பெற்றார் அப்புவின்மனைவி!

  அங்கீகாரம் கிடைத்துள்ளது

  அங்கீகாரம் கிடைத்துள்ளது

  கேள்வி: காலங்களில் அவள் வசந்தம் படத்தின் வரவேற்பு எப்படியிருக்கிறது?

  பதில்: படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரொம்ப சந்தோஷமாக உள்ளது. படத்தில் பணிபுரிந்த இந்த டீம் குறித்து பெரும்பாலனோர் கூறுகையில், புது டீம் மாதிரி தெரியவில்லை என்கின்றனர். நாங்கள் உழைத்த உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. படத்தில் பணிபுரிந்த அனைவரும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உழைத்தால் இந்த வெற்றி சாத்தியமானது என்றார்.

  பாடல் பாடும்பொழுது அவர் கர்ப்பிணி

  பாடல் பாடும்பொழுது அவர் கர்ப்பிணி

  கேள்வி: உங்களுக்கு பிடித்த பாடல் எது?

  பதில்: எனக்கு எல்லா பாடல்களையும் பிடிக்கும். தனிமையில் சிறை என்ற பாடல் ரொம்ப பிடிக்கும். இந்த பாடலை ரவி எழுதியுள்ளார். என்னுடைய இசையில் சின்மயி, ஸ்ரேயா கோஷல் ஆகியோரை பாட வைக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. பாடகி சின்மயி இந்த படத்தில் பாடல் பாடியது மூலம் எனது விருப்பம் நிறைவேறி உள்ளது. தனிமையில் சிறை பாடலை பாடும்பொழுது, அவர் கர்ப்பிணியாக இருந்தார். அந்த பாடலை ஹை பிட்ச்சில் பாட வேண்டியிருந்தது. பாடுவதற்கு ஒத்துக் கொள்வாரா? மாட்டாரா? என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. பாடுவதற்கு ஒத்துக்கொண்டு, அதை சிறப்பாகவும் பாடி கொடுத்துள்ளார் பாடகி சின்மயி. தற்பொழுது அவருக்கு குழந்தை பிறந்து விட்டது என்றார்.

  யுவன்சங்கர்ராஜா குரல்

  யுவன்சங்கர்ராஜா குரல்

  கேள்வி: மற்ற பாடல்கள் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

  பதில்: லாட்டரி பெண்ணே என்ற பாடலை எனது நண்பர் ரேஷ்மண் குமார் பாடியுள்ளார். இவரது குரல் கிட்டத்தட்ட இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜாவின் குரல் போல் இருக்கும். மேலும் ஆர்த்தியும் பாடியுள்ளார். பப்பாளி பாடலை இசையமைப்பாளர் அனிருத் வைத்து பாட வைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அவர் மிகவும் பிஸியாகவும், மிகப்பெரிய இடத்தில் இருப்பதால் அது சாத்தியப்படவில்லை. அதனால் அர்ஜூன் என்பவர் இந்த பாடலை பாட வைத்தேன். அனந்தரட்சன் மற்றும் முகேந்திரன் ராவ் ஆகியோரும் பாடல்களும் பாடியுள்ளனர். முகேந்திரன் பாடியுள்ள பாடல் நன்றாக டிரெண்ட் ஆனது என்றார்.

  இது தான் அர்த்தம்

  கேள்வி: எஸ்.ஆர். ஹரி என்பதன் விரிவாக்கம்...

  பதில்: எல்லோரும் என் பெயர் ஹரிக்கு முன்னால் ஏதாவது சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதனால் எனது அப்பா பெயரான செந்தில்குமாரையும், அம்மா பெயரான ரமாவை ஆகியோரை நினைவில் கொண்டு எஸ்.ஆர்.ஹரி என்று மாற்றியதாக தெரிவித்தார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/KeiFSYyXYRw இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

  English summary
  Anjali Nair, Debutant Kaushik Ram and Hiroshini starrer Kalangalil Aval Vasantham, produced by Aram Entertainment and directed by Raghav Mirdhat. For this film, S.R. Hari has composed the music. The film has been released in theaters and has been well received by the audience. In this case, the film's music director S.R. Hari's exclusive interview with our Filmibeat channel is here.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X