For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சம்பாதிக்கிற பணம் முழுக்க புடவைக்கு தான்.. தன் அழகின் ரகசியம் சொல்லும் குஷ்பு!

  |

  சென்னை: அவினி சினிமேக்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி. இயக்கத்தில் நடிகர் ஜீவா, மாளவிகா சர்மா, யோகிபாபு, டிடி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் காபி வித் காதல்.

  இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் அக்டோபர் 7ம் தேதி வெளியிடுகிறது. இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகல் நடந்து கொண்டு இருக்கின்றது.

  சமீபத்தில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார், அப்போது நமது பிலீம்பீட் சேனலுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

  வாரிசு, துணிவு படத்துடன் மோதும் பிரபாஸின் 'ஆதி புருஷ்' ஐமேக்ஸ்-3-D படம்..அயோத்தியில் டீசர் வெளியீடுவாரிசு, துணிவு படத்துடன் மோதும் பிரபாஸின் 'ஆதி புருஷ்' ஐமேக்ஸ்-3-D படம்..அயோத்தியில் டீசர் வெளியீடு

  வில்லன் யார்?

  வில்லன் யார்?

  கேள்வி: காபி வித் காதல் படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

  பதில்: எங்களது சொந்த தயாரிப்பு நிறுவனமான அவினி சினிமேக்ஸ் மூலம் காபி வித் காதல் திரைப்படத்தை தயாரித்துள்ளோம். இந்த படத்தில் வருகின்ற ஏதாவது ஒரு கதாபாத்திரம், ஒவ்வொரு குடும்பத்தில் ஒவ்வொருவரையும் தொடர்புப்படுத்தும். இந்த கதாபாத்திரம் நமது வீட்டில் உள்ளனர் என்கிற ஒரு சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். மேலும் இப்படத்தில் வில்லன் என்ற கதாபாத்திரம் எதுவும் கிடையாது. சூழ்நிலை தான் வில்லன் என்றார்.

  இரவு 12 மணிக்கு தூங்க செல்வேன்

  இரவு 12 மணிக்கு தூங்க செல்வேன்

  கேள்வி: இப்பொழுதும் நீங்கள் இளமையாக இருக்க என்ன காரணம்?

  பதில்: பொதுவாக நமது உடம்பை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். லாக்டவுன் நேரத்தில் இதன் அருமை எனக்கு புரிந்தது. ஏனென்றால் படப்பிடிப்பு கிடையாது. நானும், எனது கணவர் சுந்தர்.சியும், எனது குழந்தைகள் யாரும் வெளியே செல்லவில்லை. அவர் அந்த காலக்கட்டத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டார். அவருடன் இணைந்து நானும் மேற்கொண்டேன். மேலும் அக்காலக்கட்டத்தில் எங்களது பெரிய வீட்டை வேலைக்காரர்கள் யாருமின்றி, நானே காலை 5 மணிக்கு எழுந்து, வீட்டை பெருக்குவது, துடைப்பது, சமையல் செய்வது, பாத்திரங்களை விளக்குவது, மாடியில் உள்ள தோட்டத்தை பராமரிப்பது, நான்கு நாய் குட்டிகளையும் கவனிப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் செய்தேன். இரவு 12 மணிக்கு தூங்க செல்வேன். வீட்டை விட்ட வெளியே போகாமல் நான் கையில் கட்டிய ஸ்மார்ட் வாட்ஜ் மூலம் 16000 ஸ்டெப் நடந்துள்ளதை அறிந்து கொள்வேன். அதன் காரணமாகவே உடம்பு எடை குறைந்தது. வியர்வை வெளியேறும் போது நாம் அழகாக மாறி விடுகிறோம் என்றார். மேலும் அவர் கூறுகையில், இப்பொழுது நான் வெளிப்புற படப்பிடிப்புக்கு சென்றாலும், இரண்டு தடவை வாக்கிங் செல்லும் பழக்கத்தை கடைப்பிடித்து வருவதாகவும் தெரிவித்தார்.

  சண்டைகள் குறித்து விவாதித்தோம்

  சண்டைகள் குறித்து விவாதித்தோம்

  கேள்வி: சமீபத்தில் நடிகர் சரத்குமார், நடிகர் பிரபுவுடன் இணைந்து நீங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் குறித்து கூற விரும்புவது?

  பதில் : நடிகர் சரத்குமார் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பார். நடிகர் பிரபு ஏதாவது ஒரு வகையில் சிரிக்க வைத்து விடுவார். நாங்கள் மூவரும் சந்தித்த சமயங்களில் அந்த காலக்கட்டத்தில் நாங்கள் படப்பிடிப்பு தளங்களில் போட்டுக் கொண்ட சண்டைகள் குறித்து பேசினோம் என்றார்.

  கேள்வி: சின்னதம்பி 2 படம் எப்பொழுது வெளிவரும்?

  பதில்: நானும், நடிகர் பிரபுவும் முடிவெடுத்தால் மட்டும் போதாது. இயக்குநர் பி.வாசு முடிவெடுத்தால் மட்டுமே, சின்னதம்பி 2 வெளிவரும் என்றார்.

  கண் வைத்து விடுகிறார்கள்

  கண் வைத்து விடுகிறார்கள்

  கேள்வி: மல்லிகைப்பூ உங்களுக்கு பிடிக்குமா?

  பதில்: நான் ஒரு சேலை பைத்தியம் என்றும், நான் சம்பாதிக்கும் பணத்தை சேலைக்கு செலவழித்து விடுவதாகவும் எனது கணவர் சுந்தர்.சி கூறுவார். உண்மையில் எனக்கு சேலை ரொம்ப பிடிக்கும். மல்லிகைப்பூ எனக்கு பிடிக்காது. எனக்கு அலர்ஜி. ஆனால் நான் முடியை ஓப்பனாக போட்டு சென்றால் எல்லோரும் கண் வைத்து விடுகிறார்கள். அதனால் எனது அம்மா, வெளியே செல்லும்பொழுது முடியை கொண்டைபோட்டு, மல்லிகைப்பூ வைத்துக் கொண்டு செல் என்று கூறியுள்ளார். அதையே பின்பற்றி வருகிறேன் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/ScAL1eQf00o இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

  English summary
  Sundar C Directed Coffee with Kaadhal Movie Is going to Hit Theatres on October 7. Ahead of this, this movie promotional event happened recently and Kushboo Participated. Check out the Exclusive Interview with Kushboo to Our Filmibeat Channel.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X