twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஹாலிவுட்ல எனக்கு இப்படியொரு செல்லப் பெயர் வச்சிருக்காங்க...' - ஜி.வி.பிரகாஷ் குமார் ஸ்பெஷல் பேட்டி

    By
    |

    சென்னை: தனது முதல் படமான 'வெயிலி'ல் உருகுதே மருகுதே என உருக வைத்த ஜி.வி. பிரகாஷ்குமார், அசுரனின் 'எள்ளு வய பூக்கலையே' வரை இன்னும் கிறங்க வைத்துக்கொண்டிருக்கிறார் இசையால். மேலும் வர காத்திருக்கிறது பல பாடல்கள். இசையில் இப்படியென்றால் நடிப்பில், ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார் இப்போது!

    எப்படி?

    'போன வருஷம் ஒரு சவுண்ட் ட்ராக் வேலைக்காக என்னைச் சந்திச்சார் ஹாலிவுட் தயாரிப்பாளர் டெல். கணேசன். அவர் அங்க கைபா பிலிம்ஸ்ங்கற நிறுவனம் மூலம் தயாரிப்பு மற்றும் வினியோகம் பண்ணிட்டு வர்றார். இப்போ, டிராப் சிட்டி அப்படிங்கற படத்தைத் தயாரிச்சிட்டிருப்பதையும் சொன்னார். அதில் நடிக்கிறது பற்றி எங்கிட்ட கேட்டதும் உடனே ஓகே சொல்லிட்டேன் என்கிறார் ஜி.வி.பி.

     என்ன கேரக்டர் பண்றீங்க?

    என்ன கேரக்டர் பண்றீங்க?

    படம் பேரு ட்ராப் சிட்டி. வறுமைல வாடற ஒரு ராப் (Rap) பாடகனோட கதை. இந்த பாடகன், வறுமை காரணமா ஒரு போதைக் கும்பல் தலைவன்ட்ட வேலைக்கு சேர்றான். திடீர்னு அவன் எழுதிய பாடல் உலகெங்கும் பிரபலமாகுது. ஆனா, துரதிர்ஷ்டவசமா, அவன் கைதாகறான். அவனை கொல்ற முயற்சியும் நடக்குது. அதுக்குப் பிறகு அந்த பாடகன் எந்தப் பாதையை தேர்வு பண்றான் அப்படிங்கறதுதான் கதை. இதுல நான் சர்ஜனா வர்றேன்.

     படத்துல நம்மூர் நெப்போலியனும் இருக்காராமே?

    படத்துல நம்மூர் நெப்போலியனும் இருக்காராமே?

    ஆமா. நெப்போலியன் பாடிகார்டா நடிச்சிருக்கார். அவருக்கும் எனக்கும் காம்பினேஷன் காட்சிகள் இல்லை. அவர் தவிர, டிராபிக் தண்டர் , பர்சி ஜாக்சன் மற்றும் பிக் மாமா ஹவுஸ் போன்ற ஆங்கில படங்கள்ல நடிச்சிருக்கிற பிராண்டன் டி ஜாக்சன் (Brandon T Jackson) மெயின் ரோல் பண்றார். டெட் பிரஸிடெண்ட்ஸ் , நோர்பிட் போன்ற படங்களில் நடிச்ச கிலிப்டன் அப்புறம் எரிகா பின்கெட் நடிச்சிருக்காங்க. ரிக்கி பர்செல் எழுதி இயக்கி இருக்கார்.

     ஹாலிவுட் அனுபவம் எப்படி இருந்தது?

    ஹாலிவுட் அனுபவம் எப்படி இருந்தது?

    நல்ல எக்ஸ்பீரியன்ஸ். கதையை முதல்லயே கொடுத்துடறாங்க. அதனால படத்தை முழுசா உள்வாங்க முடிஞ்சது. படப்பிடிப்புக்கு போறதுக்கு முன்னால, பக்காவா ரிகர்சல் நடக்கும். அந்த ரிகர்சல் ஷூட்டிங் போகும்போது நமக்கு நம்பிக்கையை கொடுக்குது. படத்தோட ஹீரோ, பிராண்டன் நல்ல மனிதர். அவரும் ஒரு மியூசிக் லவ்வர். அவரோடு வொர்க் பண்ணினது நல்லாருந்தது. ஹாலிவுட் மாதிரி இடங்கள்ல தொடர்ந்து பயணிக்க ஆசை இருக்கு. அதற்கான முயற்சிகளும் நடந்துட்டு வருது பார்ப்போம். இந்தப் படத்துக்காக இரண்டு பாடல்கள் பாடி இருக்கேன். இது மியூசிக்கல் மற்றும் திரில்லர் படம். அங்க எனக்கு டாக்டர் ஸ்டீமின்னு நிக் நேம் வேற வச்சிட்டாங்க.

    அடுத்து என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆக இருக்கு?

    அடுத்து என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆக இருக்கு?

    வசந்தபாலன் சார் இயக்கி இருக்கிற ஜெயில் படம் முதல்ல ரிலீஸாக இருக்கு. இது எனக்கு முக்கியமான படமா இருக்கும். ஐங்கரன் படம், அடுத்தாப்ல வரும். பிறகு எழில் சார் இயக்கி இருக்கிற ஆயிரம் ஜென்மங்கள் படம் ரிலீஸ் ஆகும். சூர்யாவோட சூரரைப் போற்று, வெற்றிமாறனோட வாடிவாசல் படங்களுக்கு மியூசிக் பண்ணிட்டு இருக்கேன்.

    எல்லா மியூசிக் டைரக்டர்ஸும் கான்செர்ட் பண்ணியிருக்காங்க... நீங்க பண்ணினதே இல்லையே...?

    எல்லா மியூசிக் டைரக்டர்ஸும் கான்செர்ட் பண்ணியிருக்காங்க... நீங்க பண்ணினதே இல்லையே...?

    எனக்கும் அது கேள்வியாதான் இருக்கு. நிறைய படங்களுக்கு இசை அமைச்சிருக்கேன். 350 க்கும் மேற்பட்ட பாடல்கள் பண்ணி இருக்கேன். இருந்தாலும் கான்சர்ட் பண்ணாத இசை அமைப்பாளர் நானாகத்தான் இருப்பேன். இனும பண்ணணும். நிச்சயம் பண்ணுவேன்னு நம்பறேன்.

    English summary
    G.V.Prakash kumar says that he has an idea to do more Hollywood movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X