காதலர் தினத்தில் உங்களை சந்திக்க வருகிறார் சந்தனக்கடத்தல் வீரப்பன்
வனயுத்தம் படத்தில் வீரப்பனாக நடித்தது சவாலாக இருந்தது என்று நடிகர் கிஷோர் தெரிவித்துள்ளார்.
சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் கன்னட படம் அட்டஹாசா. இது தமிழ் மற்றும் தெலுங்கு, ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு இன்று ரிலீஸானது.
வனயுத்தம் படத்திற்கு வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த படம் பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி இன்று ரிலீஸானது. கர்நாடகத்தில் 100க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இன்று ரிலீஸானது.
இந்நிலையில் ஒன்இந்தியாவுக்கு கிஷோர் பேட்டி அளித்துள்ளார்.

வனயுத்தம் படத்தில் உங்களுக்கு வீரப்பன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது பற்றி...
இந்த படம் உண்மை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும் நிஜ சம்பவங்கள் நடந்த இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்திற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறேன். வீரப்பன் போன்று நடக்க, பேச பயிற்சி எடுத்தேன்.

ராஜ்குமாராக சுரேஷ் ஓபராய்
இந்த படத்தில் டாக்டர் ராஜ்குமாராக இந்தி நடிகர் சுரேஷ் ஓபராய் நடித்துள்ளார். அவர் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். ராஜன்னா மாதிரி அருமையாக நடித்துள்ளார்.

கர்வமில்லாத அர்ஜுன்
அர்ஜுன் போலீஸ் அதிகாரி விஜய்குமாராக நடித்துள்ளார். மனிதர் சிறிதும் கர்வமில்லாதவர். அவருடன் பணியாற்றியது அருமையான அனுபவம்.

நிஜம் நிழலாகிறதே
அண்மை காலமாக உண்மை கதைகளின் அடிப்படையில் படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இது நல்லது தான். ஆனால் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்காமல் இருக்க வேண்டும்.

தியேட்டருக்குப் போங்க ப்ளீஸ்
நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக பணியாற்றியுள்ளோம். ரசிகர்களாகிய நீங்கள் தான் நீதிபதிகள். தயவு செய்து தியேட்டர்களில் படம் பார்த்து எங்களை ஊக்குவிக்கவும்.


Click it and Unblock the Notifications











