தளபதி விஜய் கூட நடிக்க ஆசை - பிக்பாஸ் அபிராமி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

தளபதி விஜய் கூட கண்டிப்பாக நடிப்பேன். அந்த ஆசை கூடிய சீக்கிரம் நிறைவேறும் என்று கூறியுள்ளார் பிக்பாஸ் போட்டியாளர் அபிராமி. இவர் நேர் கொண்ட பார்வை படத்தில் அஜீத் உடன் நடித்திருந்தார்.

சென்னை: தல அஜீத் கூட நேர் கொண்ட பார்வை படத்தில் நடிச்சிட்டேன். தளபதி விஜய் கூட நடிக்க ஆசைப்படுகிறேன் அது 2020 ஆம் ஆண்டில் நிச்சயம் நிறைவேறும் என்று கூறியுள்ளார் பிக்பாஸ் போட்டியாளர் நடிகை அபிராமி. நடிகையும் விளம்பர மாடலுமான அபிராமி 'இரு துருவம்' என்ற வெப் சீரிஸில் நந்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.கிரைம் திரில்லராக இந்த தொடர் உருவாகி உள்ளது. இந்த வெப் சீரிஸ் பிஸிக்கு இடையே நமது பில்மி பீட் இணையதளத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை' படத்தில் பமீதா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில் 'இரு துருவம்' என்ற இணைய தொடரில் நந்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

I want to act with Thalapathy Vijay says Bigg Boss Abhirami

கணவன் மனைவி சண்டையை மையமாக வைத்து இந்த வெப் சீரிஸ் எடுத்துள்ளார்களாம்.வெப் சீரிஸ் உள்ளங்கைக்குள் வருகிறது. அது நல்ல ரீச் ஆகிறது எனவே அதில் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் அபிராமி.

இரு துருவங்கள் வெப் சீரிஸ் நன்றாக வந்திருக்கிறது. பட்டர்பிளை மாதிரி பறந்து கிட்டே இருக்கேன். நேர் கொண்ட பார்வை படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது. இரு துருவம் நல்ல எக்ஸ்பீரியன்ஸ். ரொம்ப நல்ல டீம் இயக்குநர் சரவணன் நன்றாக எடுத்திருக்கிறார்.

நந்தா கணவன் மனைவி சண்டையை பற்றி எடுத்திருக்கின்றனர். உம்முன்னு ஒரு கணவர் இருந்தா எப்படி இருக்கும். வீட்டில் க்யூட் ஆன பைட் இருக்கும். கணவன் அமைதியான கேரக்டர். நான் கலகலப்பாக பேசுவேன் என்று வெப் சீரிஸ் பற்றி நிறையவே சொன்னார்.

நிறைய வெப் சீரிஸ்தான் பண்ணுவேனா என்றால் தெரியாது சினிமாவில் நல்ல கதாபாத்திரம் வந்தால் நடிப்பேன். தல கூட நடிச்சிட்டோம் தளபதி கூட நடிக்க ஆசைப்படுகிறேன். 2020ல நடிக்க ஆசைப்படுகிறேன். பிக் பாஸ்ல யாரு ஜெயிப்பாங்கன்னு தெரியாது. அதை மக்கள்தான் முடிவு செய்வாங்க. நான் எதாவது சொல்லி அது தப்பாயிடக்கூடாது என்றும் சொன்னார் அபிராமி.

விஜய் கூட நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X