நடிகர் விஜய்யுடன் செல்பி எடுக்க ஆசை... வர்ஷா பொல்லம்மா சொன்ன ஸ்பெஷல் காரணம்
சென்னை: நடிகர் விஜய்யுடன் செல்பி எடுக்க ஆசை என்று "செல்ஃபி" பட நடிகை வர்ஷா பொல்லம்மா தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தை 15 முறைகளுக்கு மேல் பார்த்துள்ளதாகவும், அந்த படத்தில் தானும் ஒரு பகுதியாக நடித்தது சந்தோஷம் என்றும் தெரிவித்தார்.
மதிமாறன் இயக்கத்தில் நடிகர் ஜீ.வி.பிரகாஷ், நடிகை வர்ஷா பொல்லம்மா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் செல்ஃபி. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் நாயகி வர்ஷா பொல்லாம்மா, நமது பிலீம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு பார்க்கலாம்.

தலைக்கணம் இல்லை
கேள்வி: செல்ஃபி படத்தில் நீங்கள், நடிகர் ஜீ.வி.பிரகாஷ் உடன் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?
பதில்: ஜீ.வி.பிரகாஷ் நடிகர் என்று மட்டுமில்லாமல் பல திரைப்படங்களுக்கு மிக சிறப்பாக இசையமைத்துள்ளார். தான் பெரிய நடிகர், இசையமைப்பாளர் என்ற தலைக்கணம் இல்லாமல் மிகவும் எளிமையாக நடந்து கொண்டார். அவர் முதல் படத்தில் நடிப்பது போல் நடந்து கொண்டார். இதனால் என்னால் அவருடன் சகஜமாக நடிக்க முடிந்தது என்றார்.

பணம் கொடுத்தால் எம்.பி.பி.எஸ். சீட்
கேள்வி: செல்ஃபி படத்தின் வரவேற்பு எப்படியிருக்கிறது?
பதில் : படத்திற்கு வரவேற்பு நன்றாக இருக்கிறது. என்னுடைய கையில் "Ma" tatto பார்த்து இயக்குனர் மதிமாறன், செல்ஃபி படத்தில் எனது கதாபாத்திரத்திற்கு மாதவி என்று பெயர் வைத்தார். இந்த படத்தின் கதை என்னவென்றால், காலேஜ் சீட் பணம் கொடுத்து வாங்குவது தான். இது போன்ற அனுபவத்தை நான் நடித்த 96 படத்திற்கு பிறகு, என்னிடம் அக்கா எங்கிட்ட எம்.பி.பி.எஸ். சீட் இருக்கு. உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு வேணும்னா சொல்லுங்க. உங்களுக்கு ஒரு ஷேர் தரேன் என்று சொன்னார்கள். எனக்கு இது ரொம்ப கவலையளித்தது.
கேள்வி: செல்ஃபி படத்தில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் நடித்த அனுபவம்?
பதில்: நான் அவரை படப்பிடிப்பில் சந்திக்கவில்லை. ஆனால் அவருடன் திரையில் தோன்ற எனக்கு மிகுந்த ஆசை. ஒரு இயக்குனராக மிகவும் அவர் வேலையை ரசித்து செய்திருக்கிறார்.

நஸ்ரியாவும், நானும் ஒன்று
கேள்வி: உங்களுக்கு காலேஜ் தொடர்பான படங்கள் அதிகம் வருகிறதே. ஏன்?
பதில்: தோற்றம் என்பது ஒரு கதாபாத்திரத்திற்கு அவசியமான ஒன்று. நானும் அப்படி தான் நினைக்கிறேன். என்னை பார்த்தால் கல்லூரி பெண் மாதிரி தோன்றுவதாக கருதுகிறேன். இன்னும் சொல்லப்போனால் நான் நடிகை நஸ்ரியா போன்று இருப்பதாக ஒரு காலத்தில் கூறினார்கள். பிகில் படத்திற்கு பிறகு அப்படி கூறுவது குறைந்துள்ளது என்றார்.

மஞ்சுவாரியருடன் நடிக்காதது வருத்தம்
கேள்வி: 96 படத்தில் அனுபவம் எப்படியிருந்தது?
பதில்: 96 படம் எனக்கு மிகவும் பிடித்த படம். நான் 15 முறையாவது அந்த படத்தை பார்த்திருப்பேன். அந்த படத்தில் எந்தவித Violence-ம் இருக்காது. அந்த மாதிரி படத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு சந்தோஷம். இந்த படத்தில் வரும் கடிதம் போல், நானும் பெங்களூரில் இருக்கும் எனது நண்பர்களுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் எனக்கு இதுவரை அது மாதிரி கடிதம் எதுவும் வரவில்லை. 96 படத்தில் திரிஷாவிற்கு பதிலாக மஞ்சுவாரியர் நடிக்க இருந்தது ஒரு ஆச்சரியமான தகவல், அவருடன் நடிக்க முடியாமல் போனது மிகுந்த வருத்தமளிக்கிறது. இருந்தாலும் திரிஷாவுடன் இணைந்து நடித்தது சந்தோஷமாக இருந்தது. திரிஷா சிம்பலி சூப்பர் .

பிகில் படத்திற்கு ஆந்திராவில் நல்ல வரவேற்பு
கேள்வி:: பிகில் படத்திற்கு பிறகு உங்களின் திரைப்பயணம் எப்படியிருக்கிறது?
பதில்: பிகில் படம் நிறைய பெண்களுக்கு பிடித்த படமாக இருந்தது. குறிப்பாக ஆந்திரா, காக்கிநாடா போன்ற இடங்களில் உள்ள ரசிகர்கள் என்னை மிகவும் பாராட்டினார்கள். பிகில் படம் நிறைய பெண்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். "Middle Class" Movie -க்கு பிறகு எனக்கு தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. சில நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்துள்ளேன்.
நடிகர் விஜய்யுடன் செல்பி எடுக்க ஆசை
கேள்வி: நீங்கள் யாருடன் செல்ஃபி எடுக்க விரும்புகிறீர்கள்?
பதில்: எனக்கு நடிகர் விஜய்யுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. நான் பிகில் படத்தில் நடிக்கும்போது செல்ஃபி எடுக்கவில்லை. நான் பிகில் படத்தில் பணியாற்றும்போது, அவருடன் எடுத்த போட்டோக்கள் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை.அது தான் முக்கிய காரணம். விஜய்யுடன் செல்ஃபி கண்டிப்பாக விரைவில் எடுக்க வேண்டும். இந்த பேட்டியின் முழு விடியோவை பார்த்து அவர் அழைப்பார் என்று நம்புகிரேன். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/3Xct2QUdAY4 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் நடிகை வர்ஷா பொல்லம்மா இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.


Click it and Unblock the Notifications











