இந்த பிறந்தநாளில் குப்பையை வெட்டுவேன்: கமல்
இத்தனை ஆண்டுகாலம் பிறந்தநாளில் கேக் வெட்டியிருக்கிறேன். இந்த ஆண்டு பிறந்த நாளில் குப்பையை வெட்டுவேன் என்று கூறியுள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன்.
நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசன் தனது 60வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். கமலின் பிறந்தநாளை ஒட்டி அனைத்து ஊடகங்களும் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளன.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சிறப்பு பேட்டியளித்த கமல் தனது 60 வது பிறந்தநாளைப் பற்றியும், இன்றைய சினிமா பற்றியும், தனது திரைப்படங்களைப் பற்றியும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

திறமைசாலிகள் நிறைய
தமிழ் சினிமாவில் என்னைவிட திறமைசாலிகள் நிறையபேர் இருக்கிறார்கள் அவர்களில் பலர் காணாமல் போய்விட்டனர்.

முதலில் யார்
இப்போது மூன்று படங்கள் நடித்து வருகிறேன். முதலில் உத்தமவில்லன் தயாராக இருக்கிறது. அடுத்தது பாபாநாசம், மூன்றாவதாக விஸ்வரூபம் வெளியாகும் என்று நினைக்கிறேன். மூன்றுமே ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும். ரசிகர்களின் சந்தோசமே எனக்கு சந்தோசம்.

பெண்கள் சித்தரிப்பு
உலக சினிமாவில் அதிலும் இந்திய சினிமாவில்தான் பெண்கள் மோசமாக சித்தரிக்கப்படுகின்றனர். மகாபாரத காலத்தில் இருந்து நடக்கிறது. திரௌபதி துகிலுரிதலை, பாஞ்சாலி சபதம் என்று மாற்றியவர் பாரதி.
மனைவியை வைத்து சூதாடியவர்களை நாம் நாயகர்களாக கொண்டாடும் இந்த கலாச்சாரத்தில் நாம் எதை எதிர்பார்க்க முடியும். பெண்ணின் கற்பை முதலில் சுட்டு பார்த்தவர்கள், பின்னர் தீயிலிட்டு எரித்தனர். சதீ முட்டாள் தனத்திற்கு முன்னோடியானது

இந்தியாவின் துப்புறவு தொழிலாளி
நான் துப்புறவு தொழில் செய்தாலும் சிறந்த தொழிலாளி என்று பெயரெடுக்க வேண்டும் என்று எனது அம்மா ஆசைப்பட்டார். நான் மிகப்பெரிய நடிகனாகிவிட்டேன். ஆனால் அம்மாவின் ஆசையை இப்போது நிறைவேற்றப் போகிறேன். இப்போது இந்தியாவின் துப்புறவு தொழிலாளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

இந்தியாவின் துப்புரவு தொழிலாளி
நான் துப்புரவு தொழில் செய்தாலும் சிறந்த தொழிலாளி என்று பெயரெடுக்க வேண்டும் என்று எனது அம்மா ஆசைப்பட்டார். நான் மிகப்பெரிய நடிகனாகிவிட்டேன். ஆனால் அம்மாவின் ஆசையை இப்போது நிறைவேற்றப் போகிறேன். இப்போது இந்தியாவின் துப்புரவு தொழிலாளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.


Click it and Unblock the Notifications











