For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  திருட்டுத்தனமாக புதுப்படங்களை பார்ப்பேன்..பரத்துடன் லவ்.. சுவாரஸ்ய தகவல் பகிர்ந்த நடிகை வாணி போஜன்

  |

  சென்னை: ஒரு சில படங்களில் எனக்கு கிடைத்த வாய்ப்பு தவறி, மற்ற கதாநாயகிகளுக்கு அந்த வாய்ப்பு செல்லும்பொழுது கொஞ்சம் வருத்தப்படுவேன் என்று நடிகை வாணி போஜன் கூறியுள்ளார்.

  Recommended Video

  Vani Bhojan| Time management அப்படினா என்னன்னே எனக்கு தெரியாது | *Interview

  ஏவிஎம் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், நடிகைகள் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் தமிழ் ராக்கர்ஸ். இது சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

  இந்த வெப் தொடரில் நடித்த நடிகை வாணிபோஜன் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

  Thiruchitrambalam Day 3 Box Office: வெற்றியை ருசித்த தனுஷ்.. வசூல் வேட்டையாடும் திருச்சிற்றம்பலம்! Thiruchitrambalam Day 3 Box Office: வெற்றியை ருசித்த தனுஷ்.. வசூல் வேட்டையாடும் திருச்சிற்றம்பலம்!

   சமுதாயத்திற்கு தேவையான படம்

  சமுதாயத்திற்கு தேவையான படம்

  கேள்வி: தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடர் வரவேற்பு எப்படியிருக்கிறது? உங்கள் கருத்து என்ன?

  பதில்: கண்டிப்பாக இந்த சமுதாயத்திற்கு தேவையான படம் தமிழ் ராக்கர்ஸ். இயக்குநர் அறிவழகன் இந்த வெப் தொடருகாக மிகவும் சிரமப்பட்டார். இதில் நான் சந்தியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நடிகர் அருண் விஜயுடன் வெப் தொடர் முழுவதும் பயணம் செய்வேன். சினிமாத்துறையில் அனைத்தையும் இழந்த அப்பாவிற்கும், மகளுக்கும் இடையே உள்ள புரிதல் அழகாக காட்டப்பட்டிருக்கும்.

  அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். இப்படத்தில் அப்பாவுக்கும் எனக்கும் நடைபெறும் எமோஷனல் காட்சிகளில் நான் அழுதிருப்பேன். அந்த காட்சி மிக அருமையாக வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது என்றார். மேலும் நடிகர் அருண் விஜய்யுடன் எனக்கு ரொமான்ஸ் கிடையாது. ஆனால் Surprise Element இருக்கிறது.

   பைரசி குறைவதில்லை

  பைரசி குறைவதில்லை

  கேள்வி: திருட்டி விசிடியில் படம் பார்த்ததுண்டா?

  பதில்: நான் சிறுவயதில் கேபிள் டிவியில் திருட்டுத்தனமாக புதுப்படங்களை பார்த்துள்ளேன். அப்போது பைரசி குறித்த விழிப்புணர்வு எனக்கு கிடையாது. தற்போது எல்லோரும் கையில் போன் இருப்பதால் பைரசி குறைவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அதிகமாகின்றன. இதன் மூலம் சினிமாத்துறையில் பலரின் உழைப்பு திருடப்படுவது மட்டுமல்லாமல், பலர் நஷ்டமடைகின்றனர்.

   பரத்துடன் லவ்

  பரத்துடன் லவ்

  கேள்வி: நீங்கள் எந்த மாதிரியான கதாபாத்திரங்களை விரும்பி நடிக்கிறீர்கள்?

  பதில்: நான் நடிக்கின்ற படங்களை அனைவரும் கவனிக்கிறார்கள். தற்போது நடிகர் பரத்துடன் லவ் என்ற படத்திலும், மிரர் ஆகிய படங்களில் நடித்துள்ளேன். இரண்டு படங்களில் வலுவான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளேன். ஒரு படத்தில் நான் நடிக்கக்கூடிய கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் தெரிந்த பிறகு நடிக்கிறேன். சும்மா வந்து நின்றுவிட்டு, ஒரு பாடலுக்கு நடனமாடும் கதாபாத்திரத்தை ஏற்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவற்றை செய்வதற்கு எனக்கு வயதும் இல்லை என்றார்.

   எனது கஷ்டம் எனக்குள்

  எனது கஷ்டம் எனக்குள்

  கேள்வி: நீங்கள் மனதை பாதித்த விஷயங்கள் என்ன?

  பதில்: நான் ரசிகர்களின் விமர்சனங்களை படிக்கிறேன். எல்லோரையும் மதிக்கிறேன். பிளஸ், மைனஸ் என இரண்டு வகையான விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். மகான் படத்தில் எனது கதாபாத்திரம் இடம் பெறவில்லை என ரசிகர்கள் வருத்தப்பட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஒரு சில படங்களில் எனக்கு கிடைத்த வாய்ப்பு தவறி, மற்ற கதாநாயகிகளுக்கு செல்லும்பொழுது சிறிது வருத்தப்படுவேன் என்றார். மேலும் அவர் கூறுகையில், சமீபத்தில் எனது அத்தையின் இழப்பு என்னை மிகவும் பாதித்தது. எனது கஷ்டம் எனக்குள் மட்டும் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் அதை கோபமாக காட்டுவது தவறு என்று கூறியுள்ளார் வாணி போஜன்.

   பிடித்த நடிகை

  பிடித்த நடிகை

  கேள்வி: உங்களுக்கு பிடித்த கேமரா மேன், நடிகை யார்?

  பதில்: என்னுடைய மேக்கப்மேன்களாக பணிபுரியும் ரேச்சல், கணேஷ், தேஜா ஆகியோரை எனக்கு பிடிக்கும். மேலும் கேமராமேனை பொறுத்தவரை நீரவ்ஷாவும், விளம்பர கேமராமேனை பொறுத்தவரை மணிகண்டனையும் பிடிக்கும் என்றார்.

  நடிகை வினோதினியை எனக்கு ரொம்ப பிடிககும். அவர் மிக சிறந்த நடிகை. அவருடைய இன்ஸ்டகிராம் பதிவுக்கு நான் அடிமை. அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர வேண்டும் என்பது எனது ஆசை என்றார்.

   பெண் அரசியல்

  பெண் அரசியல்

  கேள்வி: எந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?

  பதில்: பொதுவாக சேலை கட்டுவதே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஃபீல் குட் படமான ஓ மை கடவுளே படத்தின் பகுதி 2 வந்தால் நல்லா இருக்கும். ஃபீல் குட் படத்தில் நடிக்க ரொம்ப ஆசை என்றார். தற்போது கொலைக்காரனின் கைரேகை என்ற வெப்தொடரில் பொலிடிக்கல் டிராமாவில் நடித்து வருகிறேன். ரொம்ப ஆர்வமாக இருந்தது. பெண் அரசியல் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம். இந்த தொடர் ஜீ5 யில் ஒளிப்பரப்பாக இருக்கிறது. இதை எஸ்.பி. பிரபாகரன் இயக்குகிறார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/kndpcShrVlg இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

  English summary
  ஒரு சில படங்களில் எனக்கு கிடைத்த வாய்ப்பு தவறி, மற்ற கதாநாயகிகளுக்கு அந்த வாய்ப்பு செல்லும்பொழுது கொஞ்சம் வருத்தப்படுவேன் என்று நடிகை வாணி போஜன் கூறியுள்ளார். தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரில் நடித்த நடிகை வாணிபோஜன் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X