என் கணவர் படத்தில் நடிக்கவே மாட்டேன்: தல ஹீரோயின்

By Siva

Recommended Video

Actress Vidhya Balan: About her harmonal problems உடல் எடை பிரச்சனை குறித்து பேசியுள்ளார்

மும்பை: கணவர் சித்தார்த் ராய் கபூர் தயாரிக்கும் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை வித்யா பாலனின் கணவர் சித்தார்த் ராய் கபூர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். இந்நிலையில் கணவர் தயாரிக்கும் படத்தில் நடிப்பீர்களா என்று வித்யா பாலனிடம் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சுவாரஸ்யமான பதில் அளித்தார்.

அந்த பேட்டியில் வித்யா கூறியதாவது,

கணவர்

கணவர்

நான் என் கணவர் தயாரிக்கும் படத்தில் நடிக்க மாட்டேன். தயாரிப்பாளர், இயக்குநருடன் ஏதாவது பிரச்சனை என்றால் விவாதிக்கலாம். வழக்கமாக நான் சண்டை போட மாட்டேன், விவாதிப்பேன், நிலைமையை புரிய வைப்பேன். ஆனால் அதை சித்தார்த்திடம் பண்ண முடியாது. எங்கள் உறவின் புனிதத்தன்மையை மெயின்டெய்ன் செய்ய விரும்புகிறேன்.

வித்யா பாலன்

வித்யா பாலன்

சித்தார்த்திடம் பணம் குறித்து நான் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. உனக்கு இது தான் சம்பளம் என்று சித்தார்த் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு நான் இது ரொம்ப குறைவாக உள்ளது, எனக்கு இதைவிட 10 மடங்கு அதிகம் கிடைக்க வேண்டும், என் திறமையை குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்றால் விவாதம் தான் ஏற்படும். அது தேவையில்லாதது என்று நினைக்கிறேன்.

மிஷன் மங்கள்

மிஷன் மங்கள்

நான் ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் கன்சக்கர் படத்தில் நடித்தபோது சித்தார்த் ராய் கபூரை டேட் செய்தேன் என்று வித்யா பாலன் தெரிவித்துள்ளார். வித்யா பாலன் நடிப்பில் அண்மையில் வெளியான மிஷன் மங்கள் படம் ரூ. 200 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் அக்ஷய் குமார், டாப்ஸி, நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குழந்தை

குழந்தை

வித்யா பாலனுக்கும், சித்தார்த் ராய் கபூருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை. இதனால் வித்யா எப்பொழுது மருத்துவமனைக்கு சென்றாலும் கர்ப்பமாக இருப்பதாக பேச்சு கிளம்பிவிடும். குழந்தை பெற்றுக் கொள்வது தன் தனிப்பட்ட விஷயம் என்று வித்யா பலமுறை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X