நடிகர் விஜய்யுடன் நடிக்க ஆசை...கின்னஸ் சாதனையாளர் விருப்பம்
சென்னை: நடிகர் விஜய்யுடன் நடிக்க ஆசை என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நிதிஷ் தெரிவித்து உள்ளார்
அபியும், நானும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நிதிஷ் மேலும் கூறுகையில், எல்லோரும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்றார்.
ஒரு நிமிடத்தில் 60 DC Characters ஐ அடையாளம் காண்பித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த நிதீஷ் பிலிம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி இங்கு பார்க்கலாம்.

கார்ட்டூன் கேரக்டர்ஸ்
கேள்வி: கின்னஸ் சாதனை எப்படி சாத்தியமாயிற்று?
பதில்: குழந்தைகள் என்றாலே கார்ட்டூன் தான் பார்ப்பார்கள். எனக்கு கார்ட்டூன் கேரக்டர்ஸ் தான் ரொம்ப பிடிக்கும். எங்க பாட்டி சீரியல் பார்க்கும்பொழுது, நான் கார்ட்டூன் பார்ப்பேன். இதன் காரணமாகவே கார்ட்டூன் கேரக்டர்ஸ் அனைத்தையும் என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. இதனால் தான் இந்த சாதனை சாத்தியமாயிற்று. இந்த சாதனைக்கு காரணமாக இருந்த எனது அம்மா & அப்பா அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி கூறுகிறேன்.

பொள்ளாச்சியில் அப்பத்தா
கேள்வி: அபியும், நானும் சீரியலில் நடிப்பது குறித்து...
பதில்: அபியும், நானும் சீரியலில் நான் நடிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. சீரியலில் நடித்து கொண்டிருக்கும் அனைவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். எல்லோரும் இனிமையாக பழகுவார்கள்.
கேள்வி: அப்பாத்தா திரைப்படத்தில் நடிப்பது குறித்து...
பதில்: இயக்குனர் ப்ரியதர்ஷன் அவர்களின் அப்பத்தா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதற்கு நான் அப்பா, அம்மா , அக்காவுடன் சென்றேன். ரொம்ப ஜாலியாக இருந்தேன். இந்த படத்தில் நடிகை ஊர்வசி அவர்கள் நடிக்கிறார்கள். எனது அக்காவிற்கு அங்கு சென்று சாக்லேட் வாங்கி வந்து கொடுத்தேன்.

பூபதி சண்முகம், விஜயலட்சுமி
கேள்வி: உங்களின் ஆசை என்ன?
பதில்: நான் விஜய் அங்கிள் ரசிகன். DC Characters ஐ விட பவுர்புல் மனிதர் அவர். விஜய் அங்கிள் கூட நடிக்கணும் என்பது எனது ஆசை.
கேள்வி: உங்களை போன்ற சிறுவர்களுக்கு சொல்ல விரும்புவது?
பதில்: எல்லோரும் வாழ்க்கையில் சாதிக்கணும். என்னுடைய சாதனைக்கு காரணமாக இருந்த எனது அப்பா பூபதி சண்முகம், அம்மா விஜயலட்சுமி பூபதி, கார்னிகா ஆகியோருக்கு எனது நன்றிகள் என்று மிகவும் இனிமையாக பேசி முடித்தார்.
பல விதமாக சாதிக்க வேண்டும்
இன்றைய குழந்தைகள் பல விதத்தில் சாதனைகள் செய்து வருகின்றனர். அதுவும் கின்னஸ் சாதனை என்பது இப்போது இருக்கும் குழந்தைகளுக்கும் அவர்களுது அறிவாற்றலுக்கும் மிகவும் எளிதாக உள்ளது . நிதிஷ் போன்ற பல குழந்தைகள் பல விதமாக சாதிக்க வேண்டும் என்பது அனைவரது ஆசையும் . இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/SkDo5qZlme0 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் நிதிஷ் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள் .


Click it and Unblock the Notifications











