டெட்பாடியாக நடிக்க டவுட் கேட்ட நிக்கி கல்ராணி… இடியட் பிரஸ் மீட்டில் நக்கலடித்த மிர்ச்சி சிவா !

சென்னை : ராம் பாலா இயக்கத்தில் உருவாகி உள்ள இடியாட் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், நிக்கி கல்ராணியை கலாய்த்து மிர்ச்சி சிவா பேசினார்.

Recommended Video

இந்த படத்துல பைத்தியமா நடிச்சிருக்கேன் | Mirchi Siva | Idiot Pressmeet | Filmibeat Tamil

இப்படத்தில் ஊர்வசி, கருணாகரன், ரவிமரியா, மயிலசாமி, ஆனந்த ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படம் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

இடியட்

இடியட்

லொள்ளு சபா புகழ் ராம் பாலா இடியட் படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரர் காமெடி வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். படத்தில் ஊர்வசி, கருணாகரன், ரவிமரியா, மயிலசாமி, ஆனந்த ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 17ந் தேதி ரிலீஸ்

செப்டம்பர் 17ந் தேதி ரிலீஸ்

இந்தப் படம் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மிர்ச்சி சிவா பேசிய போது இரண்டு வருடங்கள் கடந்து எல்லோரையும் பார்ப்பதில் மகிழ்ச்சி. இந்த கொரோனா நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்து விட்டது. கொரோனா உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் ராம்பாலா இந்தப் படத்தை பற்றி சொன்னார், ஆனால் அப்படிப்பட்ட நேரத்திலும் அனைவரையும் ஒன்று சேர்த்து படத்தை துவக்கி விட்டார் தயாரிப்பாளர் சுந்தர். அவரது வாழ்வை கேட்டால் பிரமிப்பாக இருக்கும். ஒளிப்பதிவாளர் ராஜா எப்போதுமே சிரித்த முகமாக இருப்பார் என்றார்.

இயக்குனர்கள்தான் ரியல் ஹீரோ

இயக்குனர்கள்தான் ரியல் ஹீரோ

அதேபோல யார் வேண்டுமானாலும் நடிகர் ஆகலாம் ஆனால், யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் இயக்குனராக ஆகிவிடமுடியாது, இயக்குனர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் என்றார். எங்கள் டீமிலேயே பெரிய இடியட் ராம்பாலா சார் தான். உண்மையிலேயே அவரின் உழைப்பு அவர் அமைக்கும் காட்சிகள் எல்லாமே அட்டகாசமாக இருக்கும். இடியட், லூசு, மென்டலனு இன்னும் நிறைய டைட்டில் இருக்கு இப்படி அனைத்து படங்களையும் ராம்பாலா இயக்க வேண்டும் என்று பேசினார்.

நிக்கி கல்ராணியை கலாய்த்தார்

நிக்கி கல்ராணி போல அர்ப்பணிப்பு கொண்ட நடிகையை, பார்க்க முடியாது ஒரு காட்சியில் அவர் டெட்பாடியாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கே நிறைய டவுட் கேட்டார். அந்தளவு சீரியஸான நடிகை. எந்த காட்சியில் நடித்தாலும் அதற்கு பல விளக்கங்களை கேட்டு நடிப்பார் என்றும், இருந்தாலும் டெட்பாடிக்கு அவுட் கேட்டாது அர்ப்பணிப்பான நடிப்பு என்று, மிர்ச்சி சிவா தனக்கே உரிய பாணியில் அவரை கலாய்த்தார்.

மயில்சாமி மரியாதைக்குரியவர்

மயில்சாமி மரியாதைக்குரியவர்

இப்படத்தில் மயில்சாமி ஒரு முக்கியமான கதாபாத்தில் நடித்துள்ளார். அவர் உண்மையில் மதிக்கப்படவேண்டிய நபர், நான் சம்பாதிக்கும் பணத்தையும் தாண்டி கடன் வாங்கியாவது உதவிகளை செய்கிறார். சிவன் கோவில்களுக்கு நன்கொடைகளை அளிக்கிறார் அவர்மீது பெரிய மரியாதை உள்ளது என்றார்.

பயமின்றி பார்க்கலாம்

பயமின்றி பார்க்கலாம்

நிறைய பேர் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அந்த திரைப்படங்களை பார்த்து நானே நைட்ல பயந்து இருக்கேன். ஆனால், ஒரு பேய் எப்போதும் இருட்டில், மியூசிக்கில் பயமுறுத்தும் ஆனால் அது இந்தப்படத்தில் இருக்காது. அதனால் தான் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தின் ரகசியத்தை சொல்லிவிட்டேன் ஆனாலும், இந்தப்படம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X