Robert Di Nero வுக்கு இணையாக ஆர்யா உழைத்துள்ளார்.. ஜி.எம். சுந்தர் சுவாரசிய பேட்டி
சென்னை: பா. ரஞ்சித் இயக்கத்தில் குத்துசண்டையை மையமாக வைத்து ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை.
Recommended Video
பசுபதி சார்பட்டா பரம்பரை வாத்தியாராகவும், இடியாப்ப பரம்பரையின் வாத்தியாராக ஜி.எம். சுந்தரும் நடித்துள்ளனர்.
ஜி.எம். சுந்தர் பாக்ஸிங் குறித்தும், இன்னும் சில விஷயங்கள் குறித்தும் க்ளோஸ் கால் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

70'களில் பாக்ஸிங்
70'களில் வடசென்னையில் குத்துச்சண்டை மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது. அதனை மக்கள் பெரிய ஆதரவு கொடுத்து பார்த்து வந்தனர். இதனை மையமாக வைத்து படம் பண்ண வேண்டும் என்பது இயக்குனர் ரஞ்சித்தின் ஆசை. இதனை அவர் முதல் படமாக பண்ணவிருந்தார் ஆனால் அதற்கான சூழல் அமையாமல் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகியவற்றை இயக்கினார் என கூறியுள்ளார் ஜி.எம். சுந்தர்.

டெடிகேடட் வொர்க்
படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடுவர், நேஷனல் பிளேயர், முந்தைய காலத்தில் அங்கு விளையாடிய பிளேயர் என முக்கியமான ஆட்களின் மேற்பார்வையிலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டது எனவும், மிகவும் டெடிகேடட்டாக பணிகள் நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் ஜி.எம். சுந்தர்.

Raging Bull திரைப்படம்
1980ம் ஆண்டு Martin Scorsese இயக்கத்தில் Robert Di Nero நடிப்பில் பாக்சிங்கை மையமாக வெளியான மிக முக்கியமான திரைப்படம் Raging Bull. அந்த படத்திற்கு Robert Di Nero உழைப்பு போட்டதுக்கு ஈடாக ஆர்யா இந்த படத்தில் உழைப்பு போட்டு உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து, பாக்ஸிங் கற்றுக்கொண்டு நடித்தார் என ஆர்யாவை பாராட்டியுள்ளார் ஜி.எம். சுந்தர்.

மக்களின் வாழ்வியல்
இடியாப்ப பரம்பரையின் வாத்தியாராக ஜி.எம். சுந்தர் நடித்துள்ளார். இடியாப்பம் விற்று பிழைத்து மாலை வேளையில் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் என இடியாப்ப பரம்பரை மக்களின் வாழ்வியலை இந்த பேட்டியில் ஜி.எம். சுந்தர் விவரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











