'அதை மட்டும் பண்ணாம இருந்திருந்தா ரொம்ப வருத்தப்பட்டிருப்பேன்..' சீரியசாக சொல்கிறார் நடிகை சமந்தா

By

Recommended Video

Jaanu Movie Review | Samantha | Sharwanand | Prem Kumar | Ram Jaanu

சென்னை: தமிழ், தெலுங்கு சினிமாவின் செல்லம், சமந்தா. அவரது நடிப்புக்கு அப்படி மயங்கி கிடக்கிறார் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் அமையவில்லை அவருக்கு.

தொடர்ந்து வந்த ஒன்றிரண்டு படங்கள் அவரது நடிப்பை சொல்ல, பிறகு அவரது கேரியர், டாப் கியரில் சென்றது.

நாக சைதன்யா

நாக சைதன்யா

முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்புகள் வந்தன. பிறகு பிசியாகிவிட்டார் சமந்தா. நடிகர் சித்தார்த்துடன் காதலில் விழுந்து, திருமணம் வரை சென்ற நிலையில், திடீரென பிரிந்தனர், இருவரும். பிறகு தெலுங்கு ஹீரோ நாக சைதன்யாவை காதலித்த சமந்தா, சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் சமந்தா.

த்ரிஷாவின் நடிப்பு

த்ரிஷாவின் நடிப்பு

இப்போது 96 படத்தின் ரீமேக்கான ஜானுவில் நடித்துள்ளார் சமந்தா. இந்தப் படம் நேற்று ரிலீஸ் ஆகி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சமந்தா, '96 படத்தின் ஒரிஜினலை பார்த்து அசந்தேன். இந்தப் படத்துக்கு பிறகு த்ரிஷாவை சந்திக்கவில்லை. இதில் அவரது நடிப்பை காப்பி அடித்துவிடக் கூடாது என்று நினைத்தே நடித்தேன். தமிழ்ப்படத்தில் இருந்த காட்சிகள்தான் என்றாலும் இது முழுவதுமாக வேறு உணர்வை தந்தது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.

இன்வால்வ் ஆனேன்

இன்வால்வ் ஆனேன்

இந்தப் படத்துக்காக நிறைய ரிகர்சல் செய்திருக்கிறார், சமந்தா. 'அது தேவையா இருந்தது. ஜானு சின்ன வயசுல எப்படியிருப்பா?, அவளோட தோழிகள், பெற்றோர் எப்படின்னு எல்லாத்தையும் கேள்வி மேல கேள்வியாக கேட்டேன், டைரக்டர்கிட்ட. அவர் என் கேள்விகளுக்கு எல்லாம் ரொம்ப பொறுமையா பதில் சொன்னார். அப்படித்தான் இந்த கேரக்டருக்குள்ள நான் இன்வால்வ் ஆனேன்' என்கிறார் சமந்தா.

வருத்தப்பட்டிருப்பேன்

வருத்தப்பட்டிருப்பேன்

'இது என் ஸ்பெஷல் படம். இந்தப் படத்தை மட்டும் நான் பண்ணாம போயிருந்தா, ரொம்ப வருத்தப்பட்டிருப்பேன். சினிமாவுக்கு வந்து பத்து வருஷம் ஆச்சு. ஒவ்வொரு படத்தையும் முதல் படம் மாதிரிதான் பண்றேன். பணம் பற்றி நான் நினைக்கிறதே இல்லை. என் கேரக்டர்கள் மூலமா ரசிகர்கள்ட்ட எப்படி ரீச் ஆகிறேன் அப்படிங்கறதைதான் நினைக்கிறேன்' என்கிற சமந்தா, தனது கேரக்டர்களை நூறு சதவிகித திருப்தியோடு பண்ணணும் என்பதுதான் தன் ஆசை என்கிறார் சிரித்துக்கொண்டே.

வேற என்ன வேணும்?

வேற என்ன வேணும்?

தனது கணவர் பற்றி சமந்தா பேசும்போது, 'என் முதல் படத்துல இருந்தே நானும் நாக சைதன்யாவும் நண்பர்களா இருந்தோம். ஆனாலும் அதைத்தாண்டிய ஒன்று ரெண்டு பேருக்கும் இருந்தது. இப்பவும் அப்படித்தான். எனக்கு எல்லாவிதத்துலயும் ஆதரவா, சப்போர்ட்டிவா இருக்கார் அவர். இதுக்கு மேல வேற என்ன வேணும்?' என்று கேட்கிறார் சமந்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X