Ilaiyaraaja: இளையராஜா கிட்ட ஆப்ஷனே கிடையாது... ஒரு லாலாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப் போரா..?
சென்னை: இந்தியத் திரையிசை பரப்பில் இசைஞானி இளையராஜா மிக முக்கியமானவர்.
4 தலைமுறை நடிகர்களுக்கு இசையமைத்த பெருமையோடு இசையில் பலவிதமான புதுமைகளை செய்துள்ளார்.

அவர் இசையமைக்கும் பாடல்களில் 'லாலாலா' என வரும் ஹம்மிங் ரொம்பவே ஸ்பெஷலானது.
அதுகுறித்து இசை ஆராய்ச்சியாளரும் முனைவருமான டாக்டர் கற்பகம் எமது தமிழ் ஃபிலிமிபீட் சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டியில் விவரித்துள்ளார்.
ராஜா சார் கிட்ட ஆப்ஷனே கிடையாது
அன்னக்கிளி திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. முதல் படத்தில் இருந்தே இசையுலகில் உச்சம் தொட்ட ராஜா, இப்போது வரையிலும் விதவிதமான பாடல்களை கொடுத்துக்கொண்டே இருக்கிறார். இவரது இசைக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது என்ற நிலையில், ராஜாவின் சில சிறப்பம்சங்கள் குறித்து இசை ஆராய்ச்சியாளர் டாக்டர் கற்பகம் விவரித்துள்ளார்.
முக்கியமாக பாடல் வரிகளை மறப்பவர்கள் அப்பாடலை 'லாலாலா' என சங்கதிப் போட்டு அதே மெட்டில் பாடி முடிப்பது வழக்கம். ஆனால், இந்த 'லாலாலா' என்ற ஹம்மிங்கில் கூட இளையராஜா பல புதுமைகள் செய்வார் என கூறியுள்ளார். அதாவது ஒரு பாடல் தொடங்கும் போதும் முடியும் போது அதில் 'லாலாலா' என்ற ஹம்மிங் எப்படி வர வேண்டும், அதன் தேவை என்ன என்பதை ரொம்பவே நுணுக்கமாக நோட்ஸ் எழுதுவாராம் ராஜா.
அதேபோல், ஒரு பாடலின் ராகம், மெட்டு, இசை உருவாக்கம் என அனைத்தும் முடிவான பின்னர், 'லாலாலா' என்ற ஹம்மிங்கில் எந்த மாற்றமும் செய்யமாட்டார். அவரிடம் அதனை மாற்றலாம் என்றால் கூட, அது நடக்கவே நடக்காது. எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும், அவர் சொல்லும் மாற்றங்களை இளையராஜா செய்யவே மாட்டார் எனக் கூறியுள்ளார்.
ஏனென்றால் இளையராஜா ஒரு ஜீனியஸ், அவருக்கு ஒரு பாடலை எப்படிக் கொடுக்க வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். பாடலின் இந்த இடத்தில் 'லாலா' வரவேண்டும் என தீர்மானித்துவிட்டால் அதனை சரியாக அங்கே கொண்டு வந்து விடுவார் என டாக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் இளையராஜாவின் பாடல்களில் ரொம்பவே தனித்துவமாக இடம்பெற்ற 'லாலாலா' வரிகளை குறிப்பிட்டு ராஜாவின் ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











