உன் வாய் நாறுது.. புருஷன் ஓடினதுக்கு நீதான் காரணம்.. கெனிஷாவால் அவமானப்பட்ட பெண்.. வழக்கின் பின்னணி!

சென்னை: முன்னணி நடிகராக வலம் வந்த ரவி மோகனின் விவாகரத்து விவகாரத்தில், தொடக்கம் முதலே பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த பெயர் பாடகி கெனிஷா. இவர் துபாயில் வசிக்கும் இந்தியப் பெண்மணியான ஆன்லெட் மெர்லினுக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில், ஷார்ஜா நீதிமன்றம் கெனிஷாவுக்குப் பலத்த அபராதம் விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்மணி மெர்லின், கெனிஷா மற்றும் ரவி மோகன் தனக்குக் கொடுத்த டார்ச்சர்களைப் பற்றிப் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

9 லட்சம் அட்வான்ஸ்: அதில், நான் துபாயில் இருக்கும் ஒரு முன்னணி வங்கியில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தேன். கடந்த 2020ல் என்னுடைய தோழிகள் எல்லாம் இணைந்து ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தைத் தொடங்கினோம். அதன் மூலம் பல நட்சத்திர நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். நடிகர் ரவி மோகனின் பிறந்தநாள் செப்டம்பர் மாதம் வருவதால், அதையொட்டி துபாயில் ஒரு பெரிய பிரம்மாண்ட ப்ரோக்ராம் நடத்த பிளான் செய்தோம். அதற்காகத்தான் கடந்த ஆண்டு பாடகி கெனிஷாவைத் தொடர்பு கொண்டு, முன்பணமாக 9 லட்சம் ரூபாயைக் கொடுத்தோம்.

Ravi mohan Kenishaa interview

நான் ஸ்பிரிச்சுவல் தெரபிஸ்ட்: நிகழ்ச்சி செப்டம்பரில் தான் நடக்கவிருந்தது. ஆனால் கெனிஷா ஆகஸ்ட் மாதமே தனிப்பட்ட முறையில் துபாய்க்கு வந்து இருந்தார். அப்போது அவரை நான் நேரடியாகச் சந்தித்தேன், மிகவும் கனிவாகப் பேசினார். திடீரென அவர், உன் தனிப்பட்ட வாழ்க்கையில் 17 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு நீ விவாகரத்து பெற்று 2 குழந்தைகளுடன் தவித்து வருகிறாய் தானே? என்று கேட்டார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. உங்களுக்கு எப்படித் தெரியும் எனக் கேட்டபோது, நான் ஒரு ஸ்பிரிச்சுவல் தெரபிஸ்ட் , எனக்கு எல்லாமே தெரியும். ரவி மோகன் எனக்கு நண்பரானதே நான் அவருக்குத் தெரபி கொடுத்ததால் தான் என்றார்.

பிளாக் செய்தார்: மேலும், உன் வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல இன்னும் பல ரகசியங்கள் இருக்கிறது. ஆனால், நான் பணம் வாங்காமல் சொல்லக்கூடாது. உன் பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால், நாளைக் காலையிலேயே பணத்தை எடுத்துக்கொண்டு வந்து பார் என்றார். எனக்கு அதில் ஈடுபாடு இல்லாததால் நான் போகவில்லை. இதனால் கடுப்பான கெனிஷா என் நம்பரை பிளாக் செய்தார்.

Ravi mohan Kenishaa interview

வாய் நாறுகிறது: பின் ஈவண்டிற்கு வர மாட்டேன் என்று சொன்னார். இதனால் நான் கெனிஷாவின் மேனேஜரை தொடர்பு கொண்டு பேசிய போது, ரவி மோகன் போனை வாங்கி மிகவும் தன்மையாக பேசி நிச்சயம் வருவோம் என்று சொன்னார். இதையடுத்து, நிகழ்ச்சிக்காகச் செப்டம்பர் 12 அன்று ரவி மோகனும், கெனிஷாவும் துபாய் வந்தனர். துபாயில் என்னைப் பார்த்ததும் ஓடிவந்த கெனிஷா, என் நெற்றியில் கையை வைத்து அசிங்க கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டினார். உன் புருஷன் உன்னை விட்டுப் போனதுக்குக் காரணமே நீ அழகாக இல்லை, உன் வாய் நாறுகிறது, நீ கேவலமான தொழில் செய்துதான் உன் குழந்தைகளை வளர்க்கிறாய் எனத் தரக்குறைவாகப் பேசினார்.

அசிங்கமாக பேசினார்: கெனிஷா என்னை ஓட்டல் முன்பு அவ்வளவு கேவலமாகப் பேசும் போதும், கூடவே இருந்த நடிகர் ரவி மோகன், இப்படி எல்லாம் பேசாதே என்று கெனிஷாவை ஒரு வார்த்தை கூட கட்டுப்படுத்தவே இல்லை. அதுதான் எனக்குப் பெரிய வேதனையாக இருந்தது. ஒரு பெரிய டாப் நடிகருடன் சுற்றும் ஒரு பாடகி, இவ்வளவு அசிங்கமாகவா பொதுவெளியில் பேசுவார் என்று நான்நினைத்து பார்க்கவே இல்லை. பின் அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்திய போதும், 'நீ மன்னிப்பு கேட்டால் தான், ஈவென்ட் நடக்கும் என்று பிடிவாதம் பிடித்தார். போட்ட பணம் நஷ்டமாகிவிடக் கூடாது என்பதற்காக, என் மேல் தப்பு இல்லை என்றாலும் நான் அழுதுகொண்டே அவரிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால், ஈவென்ட் முடிந்த பிறகும், நான் பணம் கொடுக்கவில்லை என இன்ஸ்டாகிராமில் என் மீது அசிங்கமாக அவதூறு பரப்பினார்.

நீதிமன்றத்தில் விழுந்த அடி: ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் துபாய் நீதிமன்றத்தில் கெனிஷா மீது 3 வழக்குகள் தொடர்ந்தேன். அதில் ஒரு அவதூறு வழக்கில் தான் இப்போது ஷார்ஜா நீதிமன்றம் அவருக்கு ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இன்னும் இரண்டு வழக்குகள் பாக்கியிருக்கிறது என மெர்லின் கண்ணீர் மல்க பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X