குழந்தையா? அம்மாவா? பிரசவத்தில் நான் பட்ட கஷ்டம்.. யாருக்குமே தெரியாது.. இந்திரஜா பேட்டி!
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கு பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கமல்ஹாசன் நட்சத்திரன் என பெயர் வைத்தார். அதைத் தொடர்ந்து, இந்திரஜா தனது குழந்தையை விதவிதமாக அலங்கரித்து போட்டோஷுட் எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார். குழந்தையின் 100வது நாளை, பெரிய நட்சத்திர ஓட்டலில் கேக் வெட்டி கொண்டாடினார். அடிக்கடி குழந்தையை போட்டோ எடுப்பது, வீடியோ வெளியிடுவது என அனைத்தையும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அண்மையில், திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், தனது எக்ஸ் தள பக்கத்தில், ரோபோ ஷங்கரின் இம்சை தாங்க முடியவில்லை. கல்யாணம், வளைகாப்பு, ஷாப்பிங் என 24 மணி நேரமும் இவர்களின் ஒவ்வொரு அசைவையும் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இவரது பேரனை வைத்து வீடியோ போடுகிறார்கள். ஒவ்வொரு வீடியோவுக்கும் கணிசமான தொகை பெறுவதாக கூறப்படுகிறது. பணம் வருகிறது என்பதற்காக 24 மணி நேரமும் உங்கள் குடும்பத்தின் சாதாரண நிகழ்வுகளை கூட வீடியோவாக காட்டுவதற்கு கூச்சமாக இல்லையா? தயவு செய்து உங்கள் பேரனையாவது இந்த போலி வெளிச்சத்தில் இருந்து விலக்கி வையுங்கள் என கூறியிருந்தார். ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவிற்கு பலர் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

பிரசவத்தில் நான் பட்ட கஷ்டம்: இந்நிலையில், இந்திரஜா சங்கர் மற்றும் கார்த்திக் இருவரும் சேர்ந்து Galatta Tamil யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதில், பேசிய இந்திரஜா, நான் 9வது மாதம் வரை ஷூட்டிங், போட்டோஷூட் என மிகவும் பிசியாக இருந்தேன். 9வது மாதம் ஸ்கேனுக்காக மருத்துவமனை போன போது தான், பாப்பா கழுத்தில் கொடி சுற்றி இருந்தது தெரிய வந்தது. இதனால், உடனே அட்மிட் பண்ண சொன்னாங்க, அதேபோல, வயிற்றில் தண்ணீரும் குறைந்து கொண்டே வந்தது. இதனால், என்னால் மூச்சுவிடவே முடியல, திரும்பி படுக்கக்கூட முடியவில்லை. நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பே இல்லை, சிசேரியனும் உடனே செய்ய வேண்டும், அதுவும் குழந்தையை காப்பாத்த முடியாது என்று சொன்னார்கள். அந்த நேரத்தில் குழந்தையா... அம்மாவா.. என்கிற நிலைமை வந்துவிட்டது. அப்போது, என் கணவர் எனக்கு இரண்டு பேரும் வேண்டும், எவ்வளவு பணம் செலவு ஆனாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று, என்னை வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதித்தார். அப்போது தான் நட்சத்திரன் பிறந்தான் என்றார்.
பொறாமையின் வெளிப்பாடு: இதைத்தொடர்ந்து பேசிய கார்த்திக், குழந்தைக்கு என்ன ஆகும் என்கிற பயத்தில் நான் வெளியில் அழுதுக்கொண்டே இருந்தேன். அப்போது, டாக்டர், மகன் பிறந்து இருக்கிறார் என்று சொன்னதுமே, அவரின் காலில் விழுந்து கதறி அழுது விட்டேன். இதைப்பார்த்த பலர், உலகத்துல இவனுக்கு மட்டும் தான் குழந்தை பிறக்குதா.... அதிசயமா பிள்ளை பெத்து இருக்கான்.. எல்லாம் நடிப்பு என்று விமர்சனம் செய்தார்கள். ஒரு சிலர் புரிந்து கொண்டு வாழ்த்தி வருகிறார்கள், சிலர் மோசமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இதை நான் பொறாமையின் வெளிப்பாடாகத்தான் பார்க்கிறேன். இணையத்தில் பேட் கமெண்ட் போடுபவர்கள் எங்கள் மீது அதிக அன்பை வைத்து இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு கடந்து விடுகிறோம் என அந்த பேட்டியில் இந்திரஜா மற்றும் கார்த்திக் இருவரும் கூட்டாக பேட்டி அளித்து இருந்தனர்.


Click it and Unblock the Notifications











