அக்காவிற்கு உதட்டில் முத்தம் கொடுத்தது தப்பா? குழந்தையே பிறக்காது.. கண்கலங்கிய இந்திரஜாவின் கணவர்!
சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது வளைகாப்பு விழா தடபுடலாக நடைபெற்று உள்ளது. இதில், சினிமா மற்றும் டிவி நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டு இந்திரஜாவை வாழ்த்தினார்கள். இதையடுத்து, youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இந்திரஜாவின் கணவர் கார்த்தி, எங்களுக்கு குழந்தையே பிறக்காது என்று பலரும் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வந்தார்கள் அதை பார்க்கும்போது வேதனையாக இருந்ததாக கூறியிருக்கிறார்.
நான் குண்டாக இருப்பதால் எனக்கு திருமணம் ஆகாது என்று பலரும் கூறினார்கள். எனக்கு முதலில் ஒரு காதல் இருந்தது அந்த காதல் தோல்வி அடைந்த பிறகு, காதலின் மீதும், திருமணத்தின் மீதும் எனக்கு நம்பிக்கையே இல்லாமல் இருந்தேன்.ஆனால், எனக்கானவள், என்னை புரிந்து கொண்டவள் வருவாள் என்று நம்பிக்கையோடு இருந்தது. அந்த நம்பிக்கை எனக்கு வீண் போகவில்லை. எனக்கு இந்திரஜா ஒரு தாயாக, மனைவியாக கிடைத்திருக்கிறாள். அனைவரும் சொல்வார்கள் மனைவியை கண்கலங்காமல் ராணி போல பார்த்துக் கொள்வேன் என்று. ஆனால், இந்திரஜா என்னை ராஜா போல கவனித்துக் கொள்கிறாள்.

குழந்தை பிறக்காது: நான் இதற்கு முன் மீடியாக்களில் அவ்வளவாக வந்தது இல்லை. நான் எப்போதும் மீடியாவிற்கு பின் தான் இருப்பேன். இந்திரஜாவுக்காக தான் நான் மீடியாக்களில் வர ஆரம்பித்தேன். திருமணத்துக்கு முன்பாகவும் சரி, திருமணத்திற்கு பின்பாகவும் சரி, பல நெகடிவ் கமெண்ட்கள் வந்தன. அதை எல்லாம் பார்க்கும்போது மனதிற்கு கஷ்டமாக இருந்தது. குறிப்பாக சொந்த தாய் மாமனையே திருமணம் செய்து கொண்டதால் குழந்தை பிறக்காது என்று கமெண்ட் போட்டு இருந்தார்கள். மேலும், திருமண ரிசப்ஷனில், பிரியங்கா அக்காவின் கன்னத்தில் முத்தம் கொடுப்பதற்கு பதிலாக தவறுதலாக உதட்டில் முத்தம் கொடுத்தது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது. அதை வைத்து படுமோசமான வந்த கமெண்ட்களை பார்த்து மிகவும் உடைந்து போனேன்.
மோசமான கமெண்ட்: ஆனால், அக்கா அவர்களை எத்தனையோ முறை நான் கட்டிப்பிடித்து இருக்கிறேன். முத்தம் கொடுத்து இருக்கிறேன். அவர்கள் என் அக்கா மட்டுமில்லை அவர்கள் எனக்கு அம்மா, அப்பா போன்றவர்கள் அந்த உறவை கொச்சைப்படுத்தி பேசும் போது வருத்தமாக இருந்தது. ஆனால், இப்போது எனக்கு ஒரு பக்குவம் வந்து இருக்கிறது. எங்களைப் பற்றி தெரிந்தவர்கள், எங்களுடன் நெருங்கி பழகியவர்களுக்கு நாங்கள் யார். நாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது தெரியும். ஆனால், ஒரு சிலர்தான் போலி ஐடியை வைத்துக்கொண்டு, முகத்தை மறைத்துக்கொண்ட தவறுதலாக இதுபோன்ற நெகட்டிவ் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனறர். இதைப்பார்த்து நான் டவுன் ஆகும் போது இந்திரஜா, யாராவது எதாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது. முதலில் கமெண்டை படிக்காதீர்கள் என்று தான் சொல்லுவார் என்று இந்திரஜாவின் கணவர் கார்த்திக் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











