கர்ப்பத்தை பற்றி மனசாட்சியே இல்லாமல் பேசினாங்க..தாங்க முடியாத வலியால் அழுதேன்.. இந்திரஜா சங்கர்!

சென்னை: மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா ஷங்கருக்கு 2024 ஆண்டு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இவர் தனது சொந்த தாய் மாமனான கார்த்திகை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது குழந்தைக்கு நட்சத்திரம் என பெயர் வைத்து இருக்கிறார்கள். இந்திரஜா அளித்து இருக்கும் பேட்டியில் விமர்சனங்களால் தான்பட்ட வேதனையை கூறியுள்ளார்.

இந்திரஜா சங்கர்: Galatta Pink யூடியூப் சேனலுக்கு இந்திரஜா அளித்த பேட்டியில், என் திருமணம் குறித்து பலவிதமான விமர்சனங்களை இப்போது வரைக்கும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன். Surrogacy, Test tube baby மூலமாகத்தான் குழந்தை பெற்றுக் கொண்டாள், இயற்கையான முறையில் இவள் கர்ப்பமாகவில்லை என சொன்னார்கள். அதோடு மட்டுமல்லாமல் மார்ச் மாதம் தான் திருமணம் நடந்தது அதற்குள்ளாக எப்படி கர்ப்பமாக முடியும் என பலவிதமான விமர்சனங்களை முன்வைத்தார்கள். அவர்களுக்கெல்லாம் நான் ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான், இயற்கையாக தான் கர்ப்பம் அடைந்தேன். இது ஒரு சயின்ஸ், பயாலஜிக்கல், நீங்க எந்த ஸ்கூலில் படிச்சீங்க, நீங்கள் எப்படி கல்யாணம் பண்ணி குழந்தை பெற்றுக் கொண்டீங்க என தெரியவில்லை. மனசாட்சியே இல்லாமல் எப்படி கர்ப்பமானீங்கனு கேக்குறீங்க, இது கடவுள் கொடுத்த வரம், இன்னாருக்கு இப்படி நடக்க வேண்டுமென இருந்தால் அது நடக்கும்.

Robo shankar Indraja Shankar
Photo Credit:

வலியால் அழுதேன்: நான் கர்ப்பகாலத்தில் எந்த விதமான சங்கடத்தையும் அனுபவிக்கவில்லை. எனக்கு நார்மல் டெலிவரி ஆகும் என்று தான் நினைத்தேன். ஆனால், கடைசி நேரத்தில் ஆப்ரேஷன் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. எனக்கு ஆபரேஷன் நடந்து கொண்டு இருக்கும்போது கூட, நான் மருத்துவர்களிடம் பேசிக்கொண்டு தான் இருந்தேன். எனக்கு ஆண் குழந்தை பிறந்ததை சொன்னபோது உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டு. ஆனால் டெலிவரிக்கு பின், என்னை எழுந்து நிக்க சொன்னார்கள். என்னால் சுத்தமாக எழுந்து நிற்கவில்லை முடியவுல்லை. என் அம்மாவின் கைகளை பிடித்துக்கொண்டு தரையில் கால் வைத்தவுடன், மொத்த உடம்பும் ஆடிவிட்டது, அப்போதுதான் வலியால் அழுதேன். அந்த வலியை என்னால் சொல்லவே முடியாது. உண்மையிலேயே தாய்மை என்பது ஒரு மிகப்பெரிய வரம். அது நார்மல் டெலிவரி ஆக இருந்தாலும் சரி, சிசேரியனாக இருந்தாலும் சரி இரண்டிலும் மிகப்பெரிய வலியை ஒரு பெண் அனுபவிக்கிறாள் என இந்திரஜா அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X