எனக்கு எல்லாமே என் நண்பர்கள் தான்.. களத்தில் சந்திப்போம் அனுபவங்கள் பற்றி மனம் திறந்த ஜீவா!
சென்னை: சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 90வது படமான களத்தில் சந்திப்போம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.
அந்த படத்தின் நாயகன் ஜீவா அளித்துள்ள பிரத்யேக பேட்டி ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் நட்பை கருவாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது.

களத்தில் சந்திப்போம்
கில்லி முதல் மாஸ்டர் வரை தமிழ் சினிமாவில் கபடி போட்டியை ஏராளமான படங்களில் பார்த்துள்ளோம். இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, பிரியா பவானி சங்கர் மற்றும் மஞ்சிமா மோகன் நடித்துள்ள களத்தில் சந்திப்போம் படமும் கபடி போட்டியையும் நட்பையும் மையப்படுத்திய படம் தான்.
ஜீவா பேட்டி
களத்தில் சந்திப்போம் படம் வெளியீட்டை முன்னிட்டு அருள்நிதி, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் முன்னதாக ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டிற்கு பேட்டி அளித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் ஜீவா கொடுத்துள்ள பிரத்யேக பேட்டியை இந்த வீடியோவில் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.

நண்பர்கள் தான் எல்லாம்
நண்பன், என்றென்றும் புன்னகை என ஏகப்பட்ட நட்பை வலியுறுத்தும் படங்களில் நடித்துள்ள நடிகர் ஜீவா, தற்போது மீண்டும் நட்பை மையமாக கொண்ட களத்தில் சந்திப்போம் படத்தில் நடித்துள்ளார். அது பற்றி கேட்டபோது, எனக்கு எல்லாமே என் நண்பர்கள் தான். எப்போதுமே எனக்கு நட்பு புடிக்கும். உறவினர்களை விட நண்பர்களுடன் தான் நான் அதிக நேரத்தை செலவிடுவேன் எனக் கூறினார்.

அருள்நிதி எப்படி
அருள்நிதி அளித்த பேட்டியில், ஜீவா எனக்காக க்ளோஸ் அப் ஷாட்கள் எல்லாம் வைக்க சொன்னார், உங்க பார்வையில் அருள்நிதி எப்படி? நிஜமாவே அப்படியெல்லாம் சொன்னீங்களா? என கேட்டதற்கு, அருள்நிதி ரொம்பவே ஜாலியான மனுஷன். படத்திற்காக ஸ்லோ கேம் எல்லாம் வாடகைக்கு எடுத்திருந்தோம், அதனால் தான் அந்த ஷாட் எல்லாம் வச்சா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன் என படு கேஷுவாலாக ஜீவா பேசிய பேட்டியை கண்டு ரசியுங்கள்!


Click it and Unblock the Notifications











