அடுத்து அம்மா ரோல்ல நடிக்கிறேன்.. பரபரப்பை கிளப்பிய யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் பேட்டி!

சென்னை: கிளாமர் ரோல்களில் கவர்ச்சியை காட்டி கலக்கி வந்த யாஷிகா ஆனந்த் இப்போ டோட்டலாக வேற ஒரு ரூட்டில் பயணிக்க ஆரம்பித்துள்ளார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் டபுள் மீனிங் வசனங்களை பேசி செம செக்ஸியாக நடித்து ரசிகர்களை பதற வைத்தவர் யாஷிகா ஆனந்த்.

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோக்களை போட்டு வைரலாக்கினார்.

அரை டவுசரில்

அரை டவுசரில்

பிக் பாஸ் தமிழ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த், அங்கேயும் அரை டவுசரிலேயே சுற்றி வந்தார். மேக்கப் போடாமல் யாஷிகா ஆனந்த் தனது ரியல் முகத்தை காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜாம்பி திரைப்படத்தில் நடித்தார்.

ஜாம்பி

ஜாம்பி

பரிதாபங்கள் கோபி, சுதாகர், யோகி பாபு, மொட்டை ராஜேந்தர் நடிப்பில் வெளியான ஜாம்பி திரைப்படத்திலும் சின்ன உடையை அணிந்து கொண்டு படம் முழுக்க கவர்ச்சியை காட்டி இருந்தார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஓடவில்லை. மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் ஆஜர் ஆகி இருந்தார்.

கடை திறப்பு விழா

கடை திறப்பு விழா

இந்நிலையில் சமீபத்தில் அழகு நிலையம் ஒன்றை திறந்து வைத்த யாஷிகா ஆனந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. மக்களுக்கு தலை முடி ரொம்பவே முக்கியம். முடி உதிரும் பிரச்சனை எனக்கும் இருக்கு இந்த க்ரோ ஹேர் நிலையத்தில் அனைத்து விதமான முடி பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது எனக் கூறினார்.

போலீஸ் அதிகாரியாக

போலீஸ் அதிகாரியாக

ஆரவ்வின் ராஜபீமா, மகத்தின் இவன் தான் உத்தமன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யாஷிகா அடுத்ததாக போலீஸ் அதிகாரியாக சல்பர் எனும் படத்திலும் நடித்து வருகிறார். கிளாமரை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு நல்ல கதாபாத்திரங்களையும் அதிரடி ஆக்‌ஷனையும் கையில் எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

அம்மாவாக

மேலும், அடுத்ததாக எஸ்.ஜே. சூர்யா படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளார். மகளிர் தினத்தில் மட்டுமல்ல பெண்கள் எப்பவுமே போல்டாக இருக்க வேண்டும் என யாஷிகா ஆனந்த் கூறியுள்ள பேட்டியை கண்டு ரசியுங்கள்!

சூடான சுவையான சினிமா மற்றும் தொலைக்காட்சி செய்திகளுக்கு பிலிமிபீட் தமிழ் இணையதளத்தின் டெலிகிராம் சானலுடன் இணைந்திருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X