‘ஜெய்பீம்’ ரொம்ப பிடிக்கும்.. சமந்தாவின் நடிப்பு சூப்பர்.. அட வானதி சீனிவாசன் இப்படியொரு ரசிகையா?

சென்னை: பாஜக தேசிய மகளிரணி தலைவியும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மகளிர் தினத்தை முன்னிட்டு நமது ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

'Kamal-ஐ பிடிக்கும்..ஆனால்..' | Vanathi Srinivasan உடன் கலகலப்பான Interview | Oneindia Tamil

அரசியலில் சாதித்த பெண்கள் குறித்து பேசிய வானதி சீனிவாசன் சினிமா பற்றிய கேள்விகளுக்கும் சுவாரஸ்யமாக பதில் அளித்துள்ளார்.

வானதி சீனிவாசனுக்குள் இப்படியொரு ரசிகை ஒளிந்திருக்கிறாரா என்கிற ஆச்சர்யங்களை விவரிக்கும் வீடியோவில் அவர் என்னவெல்லாம் கூறியுள்ளார் என்பது குறித்து இங்கே பார்ப்போம்..

மகளிர் தினத்தை முன்னிட்டு

மகளிர் தினத்தை முன்னிட்டு

மகளிர் தினத்தை முன்னிட்டு பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் நமது ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த பேட்டியில், கனிமொழி தனது தோழி என்றும் ஜெயலலிதாவின் ஆளுமை பற்றியும் தனக்கு பிடித்த 5 பெண்களான ஆண்டாள், வேலுநாச்சியார், ஓளவையார், நிவேதிதை அம்மையார், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் குறித்து பேசியுள்ளார்.

வலிமை அப்டேட்

வலிமை அப்டேட்

வானதி சீனிவாசன் வரை விட்டு வைக்காமல் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு வந்த நிலையில், அது குறித்த உங்கள் கருத்து என கேட்டதற்கு, தேர்தல் களத்தில் பிசியாக இருந்ததால் இன்னமும் வலிமை பார்க்கவில்லை என்றும், விரைவில் பார்த்து விட்டு அஜித் ரசிகர்களுக்கு எனது கருத்தை தெரிவிக்கிறேன் என்றும் கூறினார்.

செளகார் ஜானகி அம்மா

செளகார் ஜானகி அம்மா

செளகார் ஜானகி அம்மாவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுப்பது பற்றியும் அவருடைய படங்கள் பற்றியும் எழுப்பிய கேள்விக்கு, செளகார் ஜானகியின் "பார்த்த ஞாபகம் இல்லையோ" பாடலை பாடியே காட்டி விட்டார். மேலும், எதிர்நீச்சல் படத்தில் இடம்பெற்றுள்ள "அடுத்தாத்து அம்புஜம்" பாடலும் தனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார். செளகார் ஜானகி நீண்ட ஆயுளுடன் இதே போல இருக்க வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.

ஜெய்பீம் ரொம்ப பிடிக்கும்

ஜெய்பீம் ரொம்ப பிடிக்கும்

சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் பார்த்தீங்களா? என்கிற கேள்விக்கு பார்த்து விட்டேன். ரொம்ப பிடிக்கும் அந்த படம் எனக்கு சூர்யாவின் நடிப்பு நன்றாக இருந்தது. நீதியரசர் சுந்தர் உடன் நிறைய டிராவல் செய்திருக்கிறேன். சமூக கருத்துக்கள் கொண்ட படமாக ஜெய்பீம் உருவாகி இருந்தது நல்ல விஷயமாக பார்க்கிறேன் என்றார்.

சமந்தா சூப்பர்

ஏகப்பட்ட சினிமா குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், விமான பயணங்களின் போது கிடைக்கும் நேரத்தில் வெப்தொடர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், சமந்தாவின் தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடர் தனக்கு ரொம்ப பிடித்ததாகவும், சமந்தா நடிப்பில் அசத்தியிருந்தார் என்றும் பாராட்டியுள்ள பேட்டியை மிஸ் பண்ணாமல் பாருங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X