தாமரை.. அந்த பெயர் எதை கனெக்ட் பண்ணுது.. ’யாதுமாகி நின்றாய்’ நடிகை காயத்ரி ரகுராம் பளிச் பேட்டி!
சென்னை: விசில் படத்தின் ஹீரோயின், பிரபல நடன இயக்குநர், பிக்பாஸ் பிரபலம், அரசியல் பிரமுகர், தற்போது இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்ட நடிகை காயத்ரி ரகுராம் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.
ஜி5 ஸ்ட்ரீமிங் தளத்தில், காயத்ரி ரகுராம் இயக்கி நடித்துள்ள 'யாதுமாகி நின்றாய்' படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

OTT தளங்களில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படங்கள் ரிலீசான நிலையில், காயத்ரி ரகுராமின் படமும் தற்போது வெளியாகி இருக்கிறது.
2017ம் ஆண்டு இவர் இயக்கிய இந்த படம் பல்வேறு காரணங்களுக்காக ரிலீஸ் செய்யாமல் இருந்த நிலையில், தற்போது நேரடியாக ஆன்லைனில் ரிலீசாகி இருக்கிறது.
கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான ரோலில் தலை காட்டி செல்கின்றனர்.
தமிழ் சினிமா கண்டுகொள்ளாத பேக்ரவுண்ட் டான்ஸர்கள் பற்றிய கதையை இயக்கி இருக்கிறார் காயத்ரி ரகுராம்.
இந்த படத்தில் 'தாமரை' என்ற பெயரை ஏன் வைத்தீர்கள், நீங்கள் பாஜக ஆதரவாளர் என்பதற்காகவா? என்ற கேள்விக்கு, பூவை மையமாக வைத்து பெயர் வைக்க வேண்டும் என தாமரை என வைத்தேன். பாஜகவுடன் கனெக்ட் செய்தாலும் எனக்கு சந்தோஷம் தான் என தனது ஸ்டைலில் சிரித்தபடி கூறியுள்ளார்.
மேலும், தனக்கும் மீடூ பிரச்சனை நடந்திருக்கிறது என்றும், எல்லா பெண்களும் அதனை தாண்டி தான் வாழ்வில் சாதிக்கின்றனர் என்றும், பாலிவுட்டில் நெபோடிசம் பிரச்சனையை போல தமிழ் சினிமாவில் க்ரூபிஸம் பிரச்சனை இருக்கிறது என பல்வேறு விசயங்களை விவரமாக காயத்ரி ரகுராம் எடுத்து சொல்லும் இந்த பேட்டியை காண வீடியோ லிங்கை க்ளிக் செய்யுங்க!


Click it and Unblock the Notifications











