பிக் பாஸ் வீட்டுக்கு போகலப்பா.. எனக்கு என் வீடு தான் முக்கியம்.. ஜிபி முத்து பளீச் பேட்டி!
சென்னை: ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதாக ஏகப்பட்ட உறுதியான தகவல்கள் வெளியான நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் கலந்து கொள்ளவில்லை என அவரே அதிரடியாக பேசியுள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
டிக் டாக்கில் மனதுக்கு பட்டதை தனது பாணியில் பேசி பிரபலமானவர் ஜிபி முத்து.
சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்து வரும் இவர், ஏகப்பட்ட படங்களிலும் கமீட் ஆகி வருகிறார்.

டிக் டாக் பிரபலம்
டிக் டாக் செயலி மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஜிபி முத்து. டிக் டாக் செயலி தடைசெய்யப்பட்ட நிலையில், சொந்தமாக யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோக்களை வெளியிட்டு வரும் ஜிபி முத்துவுக்கு 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். ஒளிவு மறைவின்றி ஓப்பனாக பேசுவதால் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

பிக் பாஸ் வதந்தி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து கன்ஃபார்மா கலந்து கொள்கிறார் என பல டிராக்கர்கள் சத்தியம் செய்யாத குறையாக சொன்ன நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து பங்கேற்கப் போவது உறுதி என பல ரசிகர்களும் நம்பினர். ஆனால், தற்போது அது வெறும் வதந்தி என ஜிபி முத்துவே மறுத்துள்ளார்.

பிக் பாஸ் போகல
பிக் பாஸ் வீட்டுக்கு போறீங்களாமே என சமீபத்தில் என்னடா வாழ்க்கை ஆல்பம் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவரை மடக்கி பிடித்து கேள்வி கேட்க, ஐயோ சாமி.. நான் பிக் பாஸ் வீட்டுக்கெல்லாம் போகல.. அங்க போனா நான் சும்மா இருக்க மாட்டேன் சண்டை வந்துட்டா நல்லா இருக்காது என தனது பாணியில் வெளிப்படையாகவே பேசிவிட்டார் ஜி.பி. முத்து.
என் வீடு தான் முக்கியம்
மேலும், குடும்பத்தை விட்டெல்லாம் ரொம்ப நாள் பிரிந்து இருக்க முடியாது. எனக்கு என் வீடு என் மனைவி குழந்தைகள் தான் முக்கியம் என பளிச்சென பேசியுள்ள பேட்டி வைரலாகி வருகிறது. சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்து வரும் ஜிபி முத்து மேலும், பல படங்களில் கமீட் ஆகி வருவதால், இப்போதைக்கு பிக் பாஸ் பக்கம் தலை வைத்து படுக்கப் போவதில்லை என்பது உறுதியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











