»   »  லவ், மேரேஜ் பத்தி இப்போ ஐடியாவே இல்லை.. 'நந்தினி' சீரியல் ஹீரோ ராகுல் ரவி #Exclusive

லவ், மேரேஜ் பத்தி இப்போ ஐடியாவே இல்லை.. 'நந்தினி' சீரியல் ஹீரோ ராகுல் ரவி #Exclusive

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : மலையாள சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சி மூலம் தமிழ் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு பெற்ற ராகுல் ரவிக்கு தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு.

'நந்தினி' சீரியலில் ஹீரோவாக நடித்துவரும் ராகுல் ரவி அடுத்தடுத்து மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி சினிமாக்களில் நடிக்க வாய்ப்பு பெற்று வருகிறார்.

சீரியல் ஷூட்டிங், தெலுங்கு, மலையாளப் பட ஷூட்டிங் என பிஸியாக இருப்பவரை ஒரு கேப்பில் பிடித்து கேள்விகளைக் கேட்டோம். அருண் ராஜசேகராக ரசிகர்களுக்கு அறிமுகமான ராகுல் ரவியின் பேட்டி இதோ...

நடிப்பு ஆசை எப்படி வந்தது?

நடிப்பு ஆசை எப்படி வந்தது?

"ஸ்கூல் படிக்கும்போதே சினிமாவில் நடிக்கணும்ங்கிற ஆசை இருந்தது. வீட்டுல கட்டாயப்படுத்துனதால பி.டெக் படிச்சேன். காலேஜ் படிக்கும்போதே நண்பர்களின் ஆலோசனையால் மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். அப்படியே, ஒரு மலையாளப் படத்தில் ஹீரோவா நடிச்சேன். அப்புறம் சினிமாவில் தொடர்ந்து சான்ஸ் தேட ஆரம்பிச்சேன்."

சீரியலுக்கு எப்படி வந்தீங்க?

சீரியலுக்கு எப்படி வந்தீங்க?

சினிமா சான்ஸ் தேடும்போது மலையாள மனோரமா சேனல்ல சீரியல் ஹீரோவா நடிக்க சான்ஸ் வந்தது. நல்ல வாய்ப்புங்கிறதால ஓகே சொன்னேன். அந்த சீரியல் செம ஹிட் ஆச்சு. அதுக்குப் பிறகு, மலையாளத்தில் ஒரு படம் பண்ணேண். சென்னையில் தமிழ் சினிமாவிலும் வாய்ப்பு தேடினேன். ஒரு படத்தில் க்ளிக் ஆகி அப்புறம் விட்டு போச்சு."

நந்தினி சீரியல் எப்படி போகுது?

நந்தினி சீரியல் எப்படி போகுது?

"தமிழ் சினிமாவில் சான்ஸ் தேடும்போதுதான் 'நந்தினி' சீரியல் ஹீரோவா பண்ண வாய்ப்பு கிடைச்சது. சன் டி.வி-யில் ஒளிபரப்பாகுற நந்தினி சீரியல் ரொம்ப நல்லா போய்க்கிட்ருக்கு. குழந்தைகள், பெண்கள்னு எல்லோரையும் கவர்ந்து டாப் ரேட்டிங்ல போகுது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகள்லேயும் டப் ஆகி ஓடிக்கிட்ருக்கு."

அடுத்து ஹீரோ வாய்ப்பு வருதா?

அடுத்து ஹீரோ வாய்ப்பு வருதா?

"நந்தினி சீரியல் பாத்துட்டு தான் தெலுங்கு டைரக்டர் கால் பண்ணாங்க. இப்போ ஒரு தெலுங்குப் படத்திலேயும், மலையாள படத்திலேயும் ஹீரோவா பண்ணிட்ருக்கேன். இப்போ அந்தப் படங்களுக்கும் ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருக்கு. 'நந்தினி' சீரியல் ஷூட் இல்லாதப்போ மூவி ஷூட் போறதுனு மாத்தி மாத்தி பண்ணிட்ருக்கேன்."

சீரியலில் உடன் நடிக்கும் நாயகிகள் பற்றி?

சீரியலில் உடன் நடிக்கும் நாயகிகள் பற்றி?

"மலையாளத்தில் ஒரு ஷோவுக்கு ஆங்கரிங் பண்ணிட்ருந்தேன். நான் பண்ணின மலையாளப் படத்தில் 'நந்தினி' சீரியல்ல ஹீரோயின்ஸ்ல ஒருத்தரா நடிக்கிற மாளவிகா கூட தான் நடிச்சேன். இன்னொரு ஹீரோயின் நித்யா கூட இப்போதான் சேர்ந்து நடிக்கிறேன். ரெண்டு பேருமே நல்ல ஜாலி டைப். ஷூட்டிங் சூப்பரா போகும்."

தமிழில் எக்கச்சக்க ஃபேன்ஸ் இருக்காங்களாமே?

தமிழில் எக்கச்சக்க ஃபேன்ஸ் இருக்காங்களாமே?

"ஆமா, 'நந்தினி' சீரியல் மூலமா தமிழ்நாட்ல நிறைய ஃபேன்ஸ் கிடைச்சிருக்காங்க. சென்னையில் வெளியில் எங்கேயாவது போனா நல்லா மதிக்கிறாங்க. நல்லா கேர் பண்ணுவாங்க; என்னை விசாரிப்பாங்க. சீரியல் பார்க்கிறது பத்தின அவங்களோட சந்தோஷத்தை சொல்வாங்க. அதனால், நமக்கும் ஒரு ஹேப்பினெஸ் கிடைக்கும்."

தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைச்சதா?

தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைச்சதா?

"தமிழ் சினிமாவுல ஒரு படத்துல நடிக்கிறதுக்காக வெய்ட்லாம் குறைச்சேன். சில பிரச்னைகளால் அந்தப் படம் ட்ராப் ஆகிடுச்சு. அடுத்து தமிழ்ல படம் பண்றேன். தமிழ்ப் படங்கள் பண்ணணும்ங்கிறதுக்காகதான் தமிழ் சீரியல் பண்றதுக்கு ஓகே சொன்னேன். இங்கே தமிழ் சீரியல்ல நல்லா பண்ணினவங்க சினிமா ஹீரோஸ் ஆகியிருக்காங்களே.."

தமிழில் எந்த மாதிரியான கேரக்டர் பண்ணணும்னு ஆசை?

தமிழில் எந்த மாதிரியான கேரக்டர் பண்ணணும்னு ஆசை?

"ராவான படத்தில் நடிக்கணும்ங்கிறது எனக்கு பிடிச்ச விஷயம். கிராமத்து பையன் மாதிரி கேரக்டர்ஸ்ல ரா சப்ஜெக்ட் படங்கள்ல நடிக்கணும். வித்தியாசமான கேரக்டர்ஸ் பண்றது ரொம்ப பிடிக்கும். சீரியல்னா முடியுற வரைக்கும் ஒரே ரோல் தானே பண்ண முடியும். சினிமாவில் வித்தியாசமான கேரக்டர்ஸ் கிடைச்சா நமக்கே நடிக்கிறதுக்கு சேலஞ்சிங்கா இருக்கும். அது பிடிக்கும்."

காதல், திருமணம் பற்றி ஐடியா?

காதல், திருமணம் பற்றி ஐடியா?

"நோ, இப்பவரைக்கும் அந்த கமிட்மென்ட்ஸ் எதுவும் கிடையாது. கரியர்ல தான் கான்சென்ட்ரேட் பண்ணிட்ருக்கேன். நல்ல ஹீரோவா வளர்ந்ததுக்கு அப்புறம் அதையெல்லாம் பார்க்கலாம்." என முடித்துக்கொண்டார் இளம் சீரியல் ரசிகர்களின் லவ்வபிள் ஹீரோ ராகுல்.

English summary
Rahul Ravi, who acts in 'Nandini' serial is receiving great reception among fans. Here is the interview of actor Rahul Ravi...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X