அவருக்கு இன்னொரு பொண்ணு கூட தொடர்பு இருந்தது.. பாவம் கணேசன் சீரியல் நடிகை பரபரப்பு பேட்டி
சென்னை: பாவம் கணேசன் சீரியலில் நடித்து வரும் நடிகை விலாசினியின் பரபரப்பு பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் சொந்தக்கார பெண்ணான இவருக்கு திருமண உறவு சரியாக அமையவில்லை.
சபரி ஞானபிரகாசம் என்பவருடன் ஆடம்பரமாக நடைபெற்ற திருமணம் விவாகரத்தில் முடிவுக்கு வந்தது.

பாவம் கணேசன் சீரியல் நடிகை
பெரிய குடும்ப பெண்ணான விலாசினி கருப்பாக இருப்பதால் விஜேவாகும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக இந்த பேட்டியில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். பாடகியாக வர வேண்டும் என நினைத்த இவர், தற்போது பாவம் கணேசன் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இளையராஜா மருமகள்
இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவியின் சகோதரர் மகள் தான் இந்த விலாசினி. இளையராஜா உள்பட பல பிரபலங்கள் இணைந்து நடத்திய இவரது திருமண வாழ்க்கை இப்படியொரு நிலைமைக்கு வந்து நிற்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
கணவருடன் விவாகரத்து
சபரி ஞானபிரகாசம் பல மோசடி செயல்களில் ஈடுபடும் நபர் என்பது தனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை அடித்து துன்புறுத்தினார் என்றும் அவரிடம் இருந்து பிரிந்து வாழ்வது தான் தனக்கு தற்போது நிம்மதியை அளிக்கிறது என இந்த பேட்டியில் கூறியுள்ளார் விலாசினி.
பெண்ணுடன் தொடர்பு
சாதாரண குடும்ப பிரச்சனைகளையும் தாண்டி அவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனால் தான் அவரை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்தேன் என்றும் கூறியுள்ளார். மேலும், தனது நண்பர்களுக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் தொல்லை கொடுத்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த இரு பாகங்கள் கொண்ட பேட்டி வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











