twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!

    |

    சென்னை: இந்த கல்வி ஆண்டே முடியும் நிலையில், இருக்கும் போது கடைசி நேரத்தில் பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு அழுத்தம் தரக் கூடாது என ராட்சசி படத்தின் இயக்குநர் கெளதம்ராஜ் அளித்துள்ள ஸ்பெஷல் பேட்டி வைரலாகி வருகிறது.

    கடந்த 2019ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் உருவான ராட்சசி திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    மறுபடியும் மக்கள் தியேட்டருக்கு வரது யாரால.. மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள் #MasterHistoricVictoryமறுபடியும் மக்கள் தியேட்டருக்கு வரது யாரால.. மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள் #MasterHistoricVictory

    ஷான் ரோல்டன் இசையில் உருவான அந்த படத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியராஜ ஜோதிகா மிரட்டி இருந்தார்.

    ஜோதிகா மிரட்டல்

    ஜோதிகா மிரட்டல்

    தனியார் பள்ளிகளையே பல படங்களில் காட்டி வந்த நிலையில், அரசு பள்ளிகளின் சூழலையும் அதை மேம்படுத்த துடிக்கும் ஆசிரியர்களையும் சிறப்பிக்கும் விதமாக ராட்சசி படத்தை இயக்கி இருந்தார் கெளதம்ராஜ். திருமணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடித்து வரும் ஜோதிகா, பெண்களை மையப்படுத்திய போல்டான கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

    ரொம்ப கஷ்டப்பட்டேன்

    பல ஆண்டுகளாக சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த தனக்கு முதல் படம் எடுக்க ரொம்பவே கஷ்டப்பட்டு வாய்ப்புகள் கிடைத்த சுவாரஸ்ய அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்துள்ளார் ராட்சசி படத்தின் இயக்குநர் கெளதம்ராஜ். சினிமாவை தாண்டி சமூக அக்கறையிலும் அதிக ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.

    பிரஷர் ஆகிடும்

    பிரஷர் ஆகிடும்

    மீண்டும் பள்ளிகள் திறக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த கெளதம்ராஜ், கடந்த ஆண்டு மாணவர்கள் படிச்சிருந்தாங்க ஆனால், தேர்வு எழுத முடியவில்லை. இந்த ஆண்டு மாணவர்கள் படிக்கவே இல்லை, அவர்களை கடைசி நேரத்தில் பள்ளிக்கு அனுப்பி பிரஷர் கொடுத்தால் தாங்கவே மாட்டார்கள்.

    அடுத்த கல்வியாண்டில்

    அடுத்த கல்வியாண்டில்

    தன்னை பொறுத்தவரை பள்ளிகளை இந்த கல்வியாண்டில் மீண்டும் திறப்பது தேவையற்ற செயல் என்றும், அடுத்த கல்வியாண்டில் கொரோனாவின் தீவிரம் முழுமையாக நீங்கி மாணவர்கள் ஆரோக்கியமாக படிக்க வேண்டும் என்று கூறியுள்ள கெளதம்ராஜ், தனக்கு சிறு வயதில் இருந்த டீச்சர் க்ரஷ் உள்ளிட்ட சுவாரஸ்ய விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.

    English summary
    Raatchasi director Sy Gowthamraj shares his thought about schools reopening, he says it gives lot of pressure to student at the last minute.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X