காடன் படம் நடிச்ச கையோடு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. நடிகர் ராணா டகுபதி கலகல பேட்டி!
சென்னை: காடன், ஆரண்யா, ஹாத்தி மேரே சாத்தி என தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் மிரட்டியுள்ள நடிகர் ராணா டகுபதி அளித்துள்ள கலகலப்பான பேட்டி வைரலாகி வருகிறது.
காடுகளை சுயநலத்துக்காக மனிதர்கள் ஆக்கிரமிப்பதால், மனிதர்களுக்குத் தான் பிரச்சனை என்பதை வலுவாக எடுத்து சொல்லும் விதமாக இந்த படம் உருவாகி உள்ளது.
இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமில்லை என்பதையும் இந்த படம் உணர்த்தியுள்ளது.

காடுகளில் 10 யானைகளுடன் நடித்த அனுபவம் குறித்தும் இந்த படத்தில் நடித்ததால் தான் மனிதனாக தான் நிறைய விஷயங்களில் பக்குவப் பட்டுள்ளேன் என்று கூறிய ராணா டகுபதி, காடன் முடிச்ச கையோடு கல்யாணமும் பண்ணிக் கொண்டேன் உறவுகள் மேல் அப்படியொரு ஆர்வம் எழுந்துள்ளது என கலகலப்பாக பேசியுள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
சமீபத்தில் காடன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவுக்காக நடிகர் ராணா டகுபதி சென்னைக்கு வந்திருந்தார்.
டோலிவுட் நடிகராக இருந்தாலும் தமிழில் முடிந்த வரை பேசியுள்ள பல்வாள்தேவனை காட்டு ராஜாவாக காண ரசிகர்கள் வரும் மார்ச் 26ம் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











