சிவகார்த்திகேயனுக்கு நான் போட்டியா? பிளான் பண்ணி பண்ணனும் டீமுடன் ரியோ ராஜ் கொடுத்த கலகல பேட்டி!
சென்னை: இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன், ரோபோ சங்கர், பால சரவணன், அராத்தி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பிளான் பண்ணி பண்ணனும்.
விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் படக்குழுவினர்கள் கலந்து கொண்ட பேட்டி வைரலாகி வருகிறது.
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் இந்த பேட்டியில் கலந்து கொண்டு ஏகப்பட்ட தகவல்களை செம ஜாலியாக பேசியுள்ளனர்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில்
சன் மியூசிக், விஜய் டிவி என கலக்கிய ரியோ ராஜ், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். விஜய் டிவியில் இருந்து வந்த பாசத்தால் இருவரது பாண்டிங்கும் அண்ணன் தம்பி உறவாக அழகாக உள்ளது.

பிக் பாஸ் ரியோ
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் இரண்டாவது படமான பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்தில் நடித்து முடித்த ரியோ, லாக்டவுன் காரணமாக அந்த படம் வெளியாகாத நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரை இவர் நீடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனுக்கு போட்டியா
சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மற்றும் ரியோ ராஜின் பிளான் பண்ணி பண்ணனும் படங்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இரண்டு படங்களுக்கும் இடையே கிளாஷ் இருக்குமா? இருவரும் விஜய் டிவியில் இருந்து வந்துள்ளதால் போட்டி நிலவுமா என்கிற கேள்விக்கு, சிரித்துக் கொண்டே பேசிய ரியோ ராஜ், சிவகார்த்திகேயன் அளவுக்கு முன்னேற வேண்டும் என்றால், இன்னும் நிறைய உழைக்கணும். கண்டிப்பா இரண்டு படங்களும் ஒரே தேதியில் ரிலீசாகாது. நான் போட்டியெல்லாம் கிடையாதுங்க என தனது பாணியில் பேசியுள்ளார்.
சீனையே மாத்திடுவாங்க
பீட்ஸா, சேதுபதி, குள்ளநரி கூட்டம், நட்புன்னா என்னானு தெரியுமா என ஏகப்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா நம்பீசன் பேசும் போது, தமிழில் இருந்து மலையாளத்துக்கு வசனங்களை டிரான்ஸ்லேட் செய்து ரெடியாகி வரும் போது இந்த ஒரு சீனை சேர்த்துக்கலாம். இந்த வசனத்தை போட்டுக்கலாம் என இம்ப்ரூவ் பண்ணி இம்ப்ரூவ் பண்ணி சீனையே மாத்திடுவாங்க என செம ஜாலியாக பேசியுள்ள பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!


Click it and Unblock the Notifications