twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் மக்கள் இயக்கத்தில் திட்டமிடல் இல்லையா? எஸ்.ஏ. சந்திரசேகருக்கு அந்த வருத்தம் இருப்பது ஏன்?

    |

    சென்னை: புதிதாக யூடியூப் சேனலை துவங்கவுள்ள எஸ்.ஏ. சந்திரசேகர் நமது பிலிமி பீட் செய்தியாளர் வினோதுக்கு அளித்த பேட்டி டிரெண்டாகி வருகிறது.

    அஜித்தின் வலிமை படத்தை ஏன் முதல் நாளில் தியேட்டருக்கு போய் பார்க்கவில்லை என்பதற்கும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

    மேலும், அவர் பேசும் போது நடிகர் விஜய் அரசியலில் சரியான திட்டமிடல் செய்யவில்லை என்கிற வருத்தத்தை மறைமுகமாக பதிவு செய்துள்ளது ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி உள்ளது.

    ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்... பிக் பாஸ் அல்டிமேட்டில் வேற லெவல் வரவேற்பு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்... பிக் பாஸ் அல்டிமேட்டில் வேற லெவல் வரவேற்பு

    இனி யூடியூபர்

    இனி யூடியூபர்

    வனிதா விஜயகுமார் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் தங்களுக்கு என தனி யூடியூப் சேனல்களை உருவாக்கி வீடியோக்களை போட்டு வருகின்றனர். இந்நிலையில், இயக்குநரும் நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ. சந்திரசேகர் இனி யூடியூபராக போகிறார். புதிதாக ஒரு யூடியூப் பக்கத்தை ஆரம்பிக்க உள்ள அவர், அது தொடர்பாக அளித்துள்ள பிரத்யேக பேட்டி வெளியாகி உள்ளது.

    இப்போ ஏன்

    இப்போ ஏன்

    இந்த திடீர் முயற்சி இப்போ ஏன் என்கிற கேள்விக்கு பதில் அளித்த எஸ்.ஏ. சந்திரசேகர் 40 ஆண்டுகளுக்கு முன் தான் இயக்குநராக இருந்தது இப்போதைய இளைஞர்களுக்கு தெரிவதில்லை என்றும், இவருடைய தந்தை என்றே அறியப்படுகிறேன். அதனை மாற்றும் முயற்சியாகவே இந்த யூடியூப் சேனலை தொடங்குவதாக தெரிவித்துள்ளார்.

    முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே

    முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே

    மாநாடு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்திருந்தார். அந்த படம் ஹிட் ஆன நிலையில், ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வருகிறதா? என்கிற கேள்விக்கு பதில் அளித்த எஸ்.ஏ. சந்திரசேகர், பல பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், எனக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறேன். ஒரே ஒரு சீன் என்றாலும், அந்த கதாபாத்திரம் படத்திற்கு முக்கியமான கதாபாத்திரமாக இருந்தால் ஓகே சொல்லிவிடுகிறேன். மற்ற படங்களை தவிர்த்து வருகிறேன் என்றார்.

    வலிமை படம்

    வலிமை படம்

    என் மகன் விஜய்க்கு பிறகு எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் என்றால் அது அஜித் தான். வலிமை படத்தை முதல் நாளில் ஏன் பார்க்கவில்லை என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், ஏதாவது பிரச்சனை வந்துவிடும் என்பதால் அதை தவிர்த்து விடுகிறேன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அஜித் படங்களை ஆரம்பத்திலேயே தியேட்டரில் பார்ப்பதில்லை. அதற்கு முன் முதல் நாளிலேயே அஜித் படத்தை பார்த்துள்ளேன் என்றார்.

    திட்டமிடலில் பிரச்சனை

    எந்தவொரு இயக்கத்துக்கும் நான் செல்லாமல் இத்தனை ஆண்டுகாலமாக எனக்காக ஒரு இயக்கத்தை உருவாக்க நினைத்தேன். ஆனால், அது முடியவில்லை எனக் கூறிய எஸ்.ஏ. சந்திரசேகரிடம் விஜய் மக்கள் இயக்கம் சமீபத்தில் பெற்ற வெற்றியை பற்றி என்ன நினைக்கிறீர் என்கிற கேள்வி எழ, செய்தியில் வருவது மட்டும் தான் எனக்கு தெரியும். நான் கட்சியை நடத்தியிருந்தால், சரியான திட்டமிடல் இருந்திருக்கும். விஜய் மக்கள் இயக்கத்தை பற்றி விமர்சிக்கவில்லை என நழுவிய பேட்டியை மிஸ் பண்ணாமல் பாருங்கள்!

    English summary
    In his latest interview trending on Tamil Filmibeat Youtube Channel, Director and Actor Vijay’s Father, SA Chandrasekar, talks about issues in Vijay Makkal Iyakkam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X