பிக் பாஸ் லைஃப் கிடையாது.. மீ டூ எனக்கும் நடந்துருக்கு.. மனம் திறக்கும் சாய் தன்ஷிகா பேட்டி!

சென்னை: நடிகை சாய் தன்ஷிகாவின் கலக்கலான பேட்டி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

தன்ஷிகாவின் சினம் படத்திற்கு டொரொன்டோ சினிமா விருது விழாவில் விருது கிடைத்துள்ள நிலையில், அது குறித்து நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

சினம் படத்தில் நடித்த அனுபவம் மற்றும், மீ டூ பிரச்சனை குறித்து ஏகப்பட்ட விஷயங்களை நடிகை சாய் தன்ஷிகா இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

சாய் தன்ஷிகா

சாய் தன்ஷிகா

தஞ்சாவூரில் பிறந்த தமிழ் பொண்ணு தன்ஷிகா, லேட்டஸ்ட்டாக தனது பெயரை சாய் தன்ஷிகா என மாற்றிக் கொண்டார். 2006ம் ஆண்டு வெளியான நடிகர் ஷாமின் மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அரவாண், பரதேசி, கபாலி, சோலோ, இருட்டு என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

விருதுகளை குவிக்கும் சினம்

விருதுகளை குவிக்கும் சினம்

இயக்குநர் கதிர், அமீர் மற்றும் பாலா உள்ளிட்ட இயக்குநர்களிடம் பல ஆண்டுகள் உதவி இயக்குநராக பணி புரிந்த ஆனந்த்மூர்த்தி இந்த குறும்படத்தை இயக்கி உள்ளார். சக்தி கதாபாத்திரத்தில் தன்ஷிகாவும், துர்கா ரோலில் வட இந்திய நடிகை பிதிதாவும் நடித்துள்ளனர். 20 நிமிடம் ஓடக் கூடிய இந்த குறும்படம் டொரொண்டோ விருது விழாவில் விருதினை பெற்றுள்ளது.

எனக்கும் அந்த அனுபவம் இருக்கு

எனக்கும் அந்த அனுபவம் இருக்கு

மீடூ விவகாரம் தொடர்பாக நடிகை சாய் தன்ஷிகாவிடம் கேள்வி எழுப்பிய போது, கண்டிப்பா, எனக்கு மட்டும் இல்லைங்க எந்த ஒரு பொண்ணா இருந்தாலும், இந்த சமூகத்தில் அதனை கடந்து தான் வர வேண்டிய சூழல் இருக்கிறது. சமூகத்தை மாற்ற முடியாது நாமத் தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பெண் குழந்தைகளுக்கு

பெண் குழந்தைகளுக்கு

மேலும், பெண் குழந்தைகளை சாதுவாக வளர்க்காமல், போல்டாக மார்ஷியல் ஆர்ட்ஸ் எல்லாம் கற்றுக் கொடுத்து வழக்க வேண்டும். குட் டச் மற்றும் பேட் டச் போன்றவைகளை குழந்தை பருவத்திலேயே சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் நம் சமூகம் உள்ளது என்றும் வேதனையுடன் கூறியுள்ளார் தன்ஷிகா.

அதெல்லாம் லைஃப் இல்லைங்க

அதெல்லாம் லைஃப் இல்லைங்க

விரைவில் தொடங்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தன்ஷிகாவிடம் கேட்டதற்கு, பிக்பாஸா? அப்படின்னு ஒரு ஷோ இருக்கா என்கிற ரேஞ்சுக்கு ரியாக்‌ஷன் கொடுத்த அவர், அதெல்லாம் லைஃப் இல்லைங்க என்றும் அது வெறும் ஒரு ஷோ தான் என்றும் தனது கருத்தை கூறியுள்ள பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X