பிக் பாஸ் வீட்டில் அதை மட்டும் பண்ணவே முடியாது.. நமீதா போனது கஷ்டமாகிடுச்சு.. சாண்டி ஓப்பன் டாக்!

சென்னை: பிரபல நடன இயக்குநரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சாண்டி மாஸ்டர் அளித்துள்ள பிரத்யேக பேட்டி வைரலாகி வருகிறது.

Recommended Video

Bigg Boss சால் கிடைத்த வாய்ப்பு | Sandy Master Exclusive | Filmibeat Tamil

பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட சாண்டி மாஸ்டர் 3:33 எனும் படத்தில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

சாண்டி, கெளதம் மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஹாரர் படம் பற்றியும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 பற்றியும் சாண்டி மாஸ்டர் வெளிப்படையாக பல விஷயங்களை ஷேர் செய்துள்ளார்.

சாண்டி மாஸ்டர்

மானாட மயிலாட சீசன் 1ல் நடன இயக்குநராக தனது பயணத்தை தொடங்கிய சாண்டி மாஸ்டர் சிம்புவின் வாலு, உதயநிதி ஸ்டாலினின் கெத்து, ரஜினிகாந்தின் காலா, சண்டை கோழி 2, பரியேறும் பெருமாள், சர்வம் தாள மயம், தில்லுக்கு துட்டு 2, ஜெயில், ஐங்கரன் உள்ளிட்ட பல படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3

பிக் பாஸ் சீசன் 3

பிக் பாஸ் தமிழ் சீசன்களிலேயே ரசிகர்களின் மனங்களை பெரிதும் கவர்ந்த 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரன்னர் அப் ஆன சாண்டி மாஸ்டர் தற்போது ஹீரோவாக 3:33 எனும் ஹாரர் படத்தில் நடித்துள்ளார். விரைவில் அந்த படம் ரிலீசாக காத்திருக்கிறது.

சாண்டி மாஸ்டர் பேட்டி

சாண்டி மாஸ்டர் பேட்டி

இயக்குநர் நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் 3:33 எனும் பேய் படத்தில் சாண்டி மாஸ்டர் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். காமெடி பேய் படமாக இல்லாமல் நிஜமாவே த்ரில்லிங்கான பேய் படமாக இந்த படம் உருவாகி உள்ளதாக சாண்டி மாஸ்டர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார். இந்த படத்தில் கெளதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் மிரட்டி உள்ளார்.

பிக் பாஸில் அதை பண்ண முடியாது

பிக் பாஸில் அதை பண்ண முடியாது

சாண்டி மாஸ்டர் அளித்த பேட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்த பின்னரே இயக்குநர் உங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்ததாக மேடையில் சொன்னாரே என்கிற கேள்விக்கு, பிக் பாஸ் வீட்டில் நடிக்க முடியாதுங்க.. ரியலா நாம எப்படி இருக்கிறோம் என்பதும் நம்முடைய உண்மையான கேரக்டர் என்ன என்பதும் பிரதிபலித்து விடும். அதை பார்த்துத் தான் இயக்குநர் என்னை தேர்வு செய்துள்ளார் என்றார் சாண்டி.

யார் நல்லா விளையாடுறாங்க

யார் நல்லா விளையாடுறாங்க

பிக் பாஸ் சீசன் 5ஐ பார்க்கிறீங்களா? உங்களுக்கு பிடித்த போட்டியாளர் யார் என்கிற கேள்விக்கு எல்லாரையும் பிடிக்கும் தனிப்பட்ட முறையில் பிரியங்கா, இசைவாணி, இமான் அண்ணாச்சி மற்றும் ராஜுவை தெரியும் என்றார். இந்த சீசனில் யார் நல்லா விளையாடுறாங்க எனும் கேள்விக்கு 3 வாரத்துக்கு மேல் தான் சுய ரூபம் தெரியவரும் என பளிச்சென பதில் அளித்து விட்டார் சாண்டி. இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக போட்டியாளர்கள் கேமராக்களை மறந்து களத்தில் குதித்து வருகின்றனர்.

நமீதா போனது கஷ்டமாகிடுச்சு

நமீதா போனது கஷ்டமாகிடுச்சு

திருநங்கை போட்டியாளர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது பற்றி உங்கள் கருத்து என்ன? என்கிற கேள்விக்கு ரொம்பவே நல்ல விஷயங்க.. ஆனால், உடல் நிலை சரியில்லாமல் போனதன் காரணமாக அவர் வெளியேறியது ரொம்பவே கஷ்டமாகிடுச்சு. அவர் இன்னமும் பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால் பல பேருக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். மேலும், 3:33 படத்தில் வித்தியாசமான சாண்டியை பார்ப்பீர்கள் என கலகலப்பாக பேசியுள்ள பேட்டியை மறக்காம பாருங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X